ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். அதில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காரணத்தால் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகின்றனர். இதுவரை 14ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்ற நிலையில் இப்பொழுது 15வது சீசன் நடைபெற்று வருகிறது.


கடந்த 26ஆம் தேதியில் தொடங்கிய ஐபிஎல் 2022 போட்டிகள் இப்பொழுது 13 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.இரு தினங்களுக்கு முன்பு நடந்த போட்டியில் கே.எல்.கைகள் தலைமையிலான லக்னோ அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோதின.
அதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 169 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது.


இறுதிவரை போராடிய சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி 157 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது லக்னோ அணி. அதில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடிய தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகிய இருவரும் சிறப்பாக பவுலிங் செய்தனர்.
இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் ; “சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் நடராஜன் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். அவரது யாக்கர் பவுலிங் மிகவும் சிறப்பான ஒன்று.”


கடந்த ஆண்டு இறுதியில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் நடராஜன் அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் இந்திய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி நடராஜன் வீசும் யாக்கர் பவுலிங் அனைத்தும் மிகவும் துல்லியமான ஒன்று என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி..!
சில ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் விளையாடி வருகிறார் நடராஜன். அவரது அசத்தலான யாக்கர் பவுலிங் இருந்த காரணத்தால் யாக்கர் மன்னன் என்ற படத்தை பெற்றார் நடராஜன். பின்னர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்.


இனிவரும் போட்டிகளில் நடராஜன் இந்திய அணியின் இடம் கிடைக்குமா ? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!