Advertisement
HomeTrending Newsஇவங்க இப்படி பவுலிங் செய்தால் போட்டியில் வெல்ல முடியாது ; தோல்விக்கு இதுதான் காரணம் ;...

இவங்க இப்படி பவுலிங் செய்தால் போட்டியில் வெல்ல முடியாது ; தோல்விக்கு இதுதான் காரணம் ; ஷிகர் தவான் ஓபன் டாக் ;

நேற்று காலை 7:00 மணியளவில் ஆக்க்லாண்ட் மைதானத்தில் தொடங்கிய இன்றைய முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு பொறுமையான தொடக்க ஆட்டம் அமைந்தது.

முதல் 20 ஓவர் வரை பொறுமையாக விளையாடிய இந்திய அணிக்கு 100க்கு மேற்பட்ட ரன்களை அடித்தனர். ஷிகர் மற்றும் சுப்மன் கில் ஆட்டம் இழந்த பிறகு இந்திய அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடியதால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 306 ரன்களை அடித்தனர்.

அதில் ஷிகர் தவான் 72, ஸ்ரேயாஸ் ஐயர் 80, சுப்மன் கில் 50, ரிஷாப் பண்ட் 15, சூர்யகுமார் யாதவ் 4, சஞ்சு சாம்சன் 36, வாஷிங்டன் சுந்தர் 37* மற்றும் ஷர்டுல் தாகூர் 1 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 307 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி. நியூஸிலாந்து அணி இதுவரை விளையாடிய 10 ஓவர் முடிவில் 42 ரன்களை அடித்த நிலையில் 1 விக்கெட்டை இழந்துள்ளது நியூஸிலாந்து அணி. இதில் பின் ஆலென் 22, டேவன் கான்வே 16*, கேன் வில்லியம்சன் 2* ரன்களை அடித்துள்ளனர்.

நியூஸிலாந்து அணியின் வலுவான பேட்டிங் :

தொடக்க வீரரான பின் ஆலென் மற்றும் டேவன் கான்வே எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லத்தம் இருவரும் போட்டியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். ஆமாம். அதிரடியாக விளையாடிய நியூஸிலாந்து அணி 47.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 309 ரன்களை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி.

அதில் பின் அலென் 22, டேவன் கான்வே 24, கேன் வில்லியம்சன் 94*, டேரில் மிச்சேல் 11, டாம் லத்தம் 145* ரன்களை அடித்துள்ளனர். இந்திய அணியின் பவுலர்கள் விக்கெட்டை கைப்பற்ற முடியாத காரணத்தால் தோல்வியை பெற்றுள்ளது இந்திய. இப்பொழுது 1 – 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி தொடரில் முன்னிலையில் உள்ளனர்.

ஷிகர் தவான் பேட்டி :

போட்டி முடிந்த பிறகு தோல்வியை பற்றி பேசிய இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான் கூறுகையில் : “முதலில் நாங்க (இந்தியா) அடித்த ரன்கள் போதும் என்று தான் நினைத்தோம். முதல் 10 முதல் 15 ஓவர் வரை சிறப்பாக தான் பவுலிங் செய்தோம். ஆனால் அதன்பின்னர் எதிர்பாராத வகையில் ரன்களை விட்டுக்கொடுத்தோம். அதனை நியூஸிலாந்து வீரர் லத்தம் சிறப்பாக பயன்படுத்தி கொண்டார். அதுமட்டுமின்றி, 40வது ஓவருக்கு பின்பு போட்டி எங்கள் கையை விட்டு சென்றது. இருந்தாலும் பரவாயில்லை, வெற்றி தோல்வி என்பது போட்டியில் நடக்கும் விஷயம் தான்.”

“அணியில் சில இளம் வீரர்கள் விளையாடி வருகின்றனர். அதனால் செய்யும் தவறில் இருந்து கற்றுக்கொண்டு வருகின்றனர். ஆனால் இன்னும் பவுலிங் மற்றும் பீல்டிங் இரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாங்க நினைத்த மாதிரி பிளான் -ஐ சரியாக செயல்படுத்த வேண்டும், அப்பொழுது தான் எதிர் அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக விளையாட முடியும் என்று கூறியுள்ளார் தவான்.

இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் , பவுலர்களால் சரியாக விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. முதல் 20 ஒவரில் 3 விக்கெட்டை கைப்பற்றிய இந்திய அணியால் பிறகு ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் தவித்தது. அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular