ஆஸ்திரேலியா : உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நேற்று முன்தினம் முதல் நடைபெற தொடங்கியுள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

நேற்று காலை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
அதனால் முதலில் டார்கெட் செட் செய்ய களமிறங்கியது இந்திய. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரன்கள் குவிந்தது. அதிரடியாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 186 ரன்களை அடித்தனர்.
அதில் ரோஹித் சர்மா 15, கே.எல்.ராகுல் 57, விராட்கோலி 19, சூரியகுமார் யாதவ் 50, ஹர்டிக் பாண்டிய 2, தினேஷ் கார்த்திக் 20, அக்சர் பட்டேல் 6, ரவிச்சந்திரன் அஸ்வின் 6 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா அணி.

ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. ஏனென்றால், தொடக்கத்தில் அதிரடியாக விளையாட தொடங்கிய ஆஸ்திரேலியா அணி ஒரு கட்டத்திற்கு பின்பு சரியாக விக்கெட்டை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது. இருப்பினும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 76 ரன்களை விளாசினார்.
அதன்பின்னர் எந்த வீரரும் பெரிய அளவில் ரன்களை அடிக்காத காரணத்தால் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 180 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது. இதில் ஆரோன் பின்ச் 76, மிச்சேல் மார்ஷ் 35, ஸ்டீவ் ஸ்மித் 11, க்ளென் மேக்ஸ்வெல் 23 ரன்களை அடித்துள்ளனர்.
இந்த போட்டியில் பும்ராவிற்கு பதிலாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஷமி போட்டியில் இடம்பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, டெத் ஓவர் மட்டும் பவுலிங் செய்த முகமத் ஷமி 4 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் சர்மா : “நாங்க பேட்டிங் சிறப்பாக தன செய்தோம், இருந்தாலும் இறுதியாக இன்னும் 15 ரன்கள் அடித்திருக்க வேண்டும். எப்பொழுதும் பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை விளையாட வேண்டும். அதனை சூரியகுமார் யாதவ் சிறப்பாக செய்துள்ளார்.”
“கிடைக்கும் கேப் பார்த்து ரன்களை அடித்து ஓவருக்கு குறைந்தது 8 அல்லது 9 ரன்களை அடித்தால் கூட சரியான பிளான் ஆக தான் இருக்கும்.இது சிறப்பான பயிற்சி ஆட்டம் தான். இந்திய அணியில் முன்னேற்றம் தான் நடந்து வருகிறது, இருந்தாலும் பவுலிங்-ல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். ஷமி நீண்ட இடைவேளைக்கு பிறகு விளையாட ஆரம்பித்துள்ளார். அதனால் தான் அவருக்கு ஓவர் கொடுக்க வேண்டுமென்று நினைத்தோம். அதுவும் இறுதி ஓவரில் அவரது பவுலிங் எப்படி இருக்கும் என்பதை காட்டியுள்ளார் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”
பும்ராவிற்கு சரியான மாற்றமாக முகமத் ஷமி இருப்பாரா ? இல்லையா ?
0 Comments