தோனி இல்லை ; இவரை போல ஒரு இந்திய வீரர் மீண்டும் கிடைப்பது மிகவும் கடினம் ; இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் கூறியுள்ளார்

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் போட்டி சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் வீரர்கள் சிலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வேறு வழியில்லாமல் போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்தது பிசிசிஐ.

அதன்பிறகு பிசிசிஐ வீரர்களை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டியில் களமிறங்க போகிறது இந்திய அணி. ஆனால் எதிர்பாராத விதமாக ஹார்டிக் பாண்டிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஏன் அவர் போட்டியில் இல்லை என்று கேள்விக்கு பதிலளித்த பிசிசிஐ; கடந்த பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் சரியாக விளையாடவில்லை என்பதால் அவரை விளக்கியுள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் அவர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வப்போது, கிரிக்கெட் வீரர்கள் பற்றி சில வீரர்கள் அவரவர் கருத்தை வெளிப்படுவது வழக்கம். அதேபோல தான் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஆன பாரத் அருண் ஹார்டிக் பாண்டியவை பற்றி சில முக்கியமான கருத்தை பகிர்ந்துள்ளார்.

அவரை (ஹார்டிக் பாண்டிய) பற்றிய பேசிய அவர் ; உண்மையாக மீண்டும் ஹார்டிக் பாண்டிய போன்ற ஒரு பவுலர் இந்திய அணிக்கு கிடைப்பது மிகவும் கடினம். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்துள்ளார் ஹார்டிக்.

ஹார்டிக் பாண்டிய ஒரு மிகச்சிறந்த பவுலர், அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு சில அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருந்து அவரால் சுலபமாக வெளியே வர முடியாது.

அவரால் முடியவில்லை என்றாலும் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரால் முடிந்த அவரை சில ஓவர் பந்து வீசியுள்ளார். அதில் அவரது திறமையான பவுலிங் வெளிப்பட்டது. அதனை கடைபிடிக்க நங்கள் அவரை இன்னும் தயார் செய்ய வேண்டியுள்ளது என்று இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

அவருக்கு 2019ஆம் ஆண்டு சில உடல்நிலை குறைவால் மற்றும் அவரது தோள்பட்டையில் சில காயம் ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளிலும், ஐபிஎல் 2021யிலும் பவுலிங் செய்ய முடியாமல் போய்விட்டது என்று பிசிசிஐ கூறியுள்ளது.