இந்திய கிரிக்கெட் அணி :
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக போட்டிகளில் விளையாடி வருகின்றனர். தொடர்ந்து சீரியஸ் தொடர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.


இந்திய அணியின் பயிற்சியாளர்:
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற உலகக்கோப்பை போட்டி வரை ரவி சாஸ்திரி தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். ஆனால், அதன் பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் பயிற்சியளராக இடம்பெற்றது மிகவும் சந்தோசமாக விஷயமாக மாறியது.
ஏனென்றால், அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக சிறப்பாக அணியை வழிநடத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி ராகுல் டிராவிட் வருகை இந்திய வீரர்களுக்கு மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்த விஷயமாக மாறியது. ராகுல் டிராவிட் எப்பொழுதும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுப்பதை விட இளம் வீரர்களுக்கும் அவ்வப்போது வாய்ப்பை கொடுத்து வருகிறார்.


ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் காம்போ :
விராட்கோலி கேப்டனாக பதவியில் இருந்து விலகிய பிறகு ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரின் காம்போ மிகவும் சிறப்பாக உள்ளது தான் உண்மை. ஆமாம், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் சிறப்பாக விளையாடி வந்துள்ளனர்.
ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பதவி ஏற்ற பிறகு நடக்க போகும் முக்கியமான முதல் சாம்பியன் போட்டி தான் ஆசிய கோப்பை 2022. இதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்று தீவிரமான பயிற்சியில் இடப்பட்டு வருகின்றனர்.
ஆசிய கோப்பை :
வருகின்ற 28ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை 2022 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இந்திய, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் தான் ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.


ரோஹித் சர்மா பேட்டி:
சமீபத்தில் இந்தியா அணியின் கேப்டனான ரோஹித் சர்மா சில முக்கியமான தகவலை பற்றி கூறியுள்ளார் ; அதில் ” நாங்கள் (இந்திய) ஒரு அணியாக அனைத்து விதமான மூன்று (ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20) போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும். அதற்கு உதவி செய்ய ராகுல் டிராவிட் தயாராக உள்ளார். அதனால் அவரது பயிற்சிக்கு கீழ் பல போட்டிகளில் விளையாடியது ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”