கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் நாளை மறுநாள் முதல் நடைபெற உளது. அதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பும்ரா, விராட்கோலி போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளது பிசிசிஐ.


அதனால் இந்த முறை ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை ஷிகர் தவான் தான் வழிநடத்த உள்ளார். அதுமட்டுமின்றி, இந்த முறை ஒருநாள் போட்டியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்திய அணியின் விளையாட்டு எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்:
ஷிகர் தவான், ரூட்டுராஜ் கெய்க்வாட், சுமன் கில், சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஷர்டுல் தாகூர், யுஸ்வேந்திர சஹால், பிரஷித் கிருஷ்ணா, முகமத் சிராஜ், அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.


சமீபத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான தொடரில் இந்திய அணி வென்றுள்ளது. அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணியும் சமீபத்தில் தான் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அணிகளை எதிர்கொண்டு விளையாடி வந்தனர்.
அதில் பங்களாதேஷ் அணி தான் தொடரை கைப்பற்றியுள்ளனர். அதனை தொடர்ந்து இந்திய அணியை எதிர்த்து விளையாட ஆர்வமாக உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி எப்பொழுதும் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் ஒருநாள் போட்டிகளில் மோசமான நிலையை சந்தித்து வருகின்றனர்.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியை பற்றி பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் கூறுகையில் ; ” நங்கள் இனிவரும் ஒருநா;ள் போட்டிகளில் அதிகமான கவனம் செலுத்தி போட்டிகளில் விளையாட வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று தான். அதுமட்டுமின்றி அணியையும் சரியாக அமைத்து போட்டிகளில் விளையாட வேண்டும்.”


“நாங்கள் எதிர்கொள்ள போகும் இந்திய அணியில் முன்னணி வீரர்கள் அணியில் இல்லையென்றாலும், குறைத்து மதிப்பிட போவது இல்லை. ஏனென்றால், இப்பொழுது இருக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாட கூடியவர்கள் தான். இந்திய அணி எப்படி பட்ட அணி என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.’
“அதனால் நிச்சியமாக எங்களால் முடிந்த வரை நாங்கள் வெற்றியை கைப்பற்ற அனைத்து விதமான முயற்சிகளையும் கையில் எடுப்போம். அதுமட்டுமின்றி, நான் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணியை வழிநடத்தி வருவது சந்தோசமாக தான் உள்ளது. அது மட்டுமின்றி, எங்களுக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் பூரான்.”