நீ சரிப்பட்டு வரமாட்ட, இனிமே இவர் தான் கேப்டன்ஷி-க்கு சரியா இருப்பாரு; இனிமே அணிக்கு இவரை கேப்டனாக போடுங்கள் என முன்னாள் கேப்டன் காட்டம்!!

0

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்ததையடுத்து, புதிய கேப்டனாக இவரை நியமித்து விடுங்கள் என முன்னாள் கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளையும் இழந்து, ஆஷஸ் தொடரையும் மீண்டுமொருமுறை ஆஸ்திரேலிய அணியிடம் பறிகொடுத்திருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் செய்த அதே தவறை மூன்றாவது போட்டியிலும் செய்ததால் இங்கிலாந்து அணி படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. 

ஜோ ரூட் பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடி வந்தாலும், கேப்டன் பொறுப்பில் மிகவும் மோசமாக வழிநடத்தி வருகிறார் என்று ஜாம்பவான்கள் பலர் விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர். இத்தகைய விமர்சனத்திற்கு முக்கிய காரணம், ஆஷஸ் தொடரில் பெற்ற தோல்வி மட்டுமில்லை.

இந்தவருடம் 9 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்திருக்கிறது. அதில் இந்திய அணியிடம் தோல்வியுற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளும் அடங்கும்.  புள்ளிவிவரங்கள் அடிப்படையில் சிறந்த கேப்டனாக ஜோ ரூட் இருந்தாலும், இந்த ஆண்டில் மிக மோசமாக தோல்விகளை இங்கிலாந்து அணி சந்தித்ததால்,

இனி அவர் கேப்டன் பொறுப்பில் நீடிப்பதற்கு சரியாக இருக்காது என்று விமர்சனங்கள் வந்திருக்கின்றன. இதற்கு ஒருபடி மேலே சென்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆர்தர், இனி கேப்டனாக இவர்தான் வர வேண்டும் என்றும் தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், 

“ஜோ ரூட் இந்த வருடம் தனது பேட்டிங்கில் அதிக ரன்களை அடித்து இருக்கிறார். ஆனால் இங்கிலாந்து அணியை வழிநடத்திய விதம் மிகவும் மோசமாக இருந்தது. அவரது திட்டங்கள் எதிர்பார்த்த அளவிற்கு செல்லவில்லை. இது குறித்து அவருக்கு வருத்தங்கள் இருக்கலாம்.

ஆனால் இந்த வருடம் 9 போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வியுற்று இருக்கிறது. ஒரு தொடரில் அல்லது இரண்டு தொடர்களில் தோல்விகளை சந்திப்பது இயல்பு. அடுத்தடுத்து பல தோல்விகளை சந்தித்தால், நிச்சயம் அணியில் மாற்றங்களை கொண்டு வருவதே சரியான முடிவாக இருக்கும். 

ரூட் தனது கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும். புதிய கேப்டனாக ஆக்ரோஷம் மிக்க பென் ஸ்டோக்ஸ் நியமிப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். உள்ளூர் போட்டிகளில் அவர் பலமுறை கேப்டனாக இருந்து அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறார்.

ரூட் இல்லாதபோது பந்துவீச்சை வழிநடத்தி அடுத்தடுத்த விக்கெட்டுகளையும் எடுத்துக் காட்டியுள்ளார். இது வரும் 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் கேப்டனாக நியமித்து பரிசோதித்து பார்க்கலாம்.” எனவும் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here