பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இதுதான் நடக்க போகிறது ; சேவாக் பேட்டி ; உறைந்து போன கிரிக்கெட் ரசிகர்கள் ; முழு விவரம் இதோ ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி உலகக்கோப்பை போட்டி கடந்த 17ஆம் தேதி அன்று தொடங்கியது. ஆனால் இன்னும் சூப்பர் 12 அணிகளுக்கு இடையே போட்டிகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த முறை ஐசிசி உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றும் ஓமன் நாட்டிலும் நடைபெற உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சேவாக் அளித்த பேட்டியில் ; இந்திய பாகிஸ்தான் போட்டி என்று வந்துவிட்டால் அவ்வளவு தான். அதனை பற்றி பேசி கொண்டே இருப்பார்கள். அதுமட்டுமின்றி அந்த போட்டியை பற்றி விவாதம், ரசிகர்களுக்கு இடையே மோதல், மற்றும் பல கருத்து வேறுபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அதுமட்டுமின்றி, உலகக்கோப்பை போட்டியில் ஒருமுறை கூட இந்திய கிரிக்கெட் அணியை வென்றதே கிடையாது பாகிஸ்தான் அணி. இதனை காலம் காலமாக பேசி கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த முறை ஐசிசி உலகக்கோப்பை 2021ல் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று கேள்வி எழுகிறது…??

பாகிஸ்தான் அணிக்கு சிரமம் தான். எனென்றால் சமீப காலமாக பாகிஸ்தான் அணி 50.ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியது இல்லை. ஏனென்றால் அந்த விளையாட்டில் ஒரு வீரர் நினைத்தால் மொத்த போட்டியையும் மாற்றி அமைக்க முடியும். ஆனால் அதனை பாகிஸ்தான் அணி செய்ததே கிடையாது. அதனால் 24ஆம் அன்று என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் விரேந்திர சேவாக் ….!!!

சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் விராட்கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷாப் பண்ட், இஷான் கிஷான் , சூர்யகுமார் யாதவ், வருண் சக்ரவத்தி, ராகுல் சஹார், பும்ரா, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு வருகின்ற 24ஆம் தேதி அன்று தான் முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த முறை இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லுமா ?? என்று உங்கள் கருத்துக்களை COMMENTS பண்ணுங்க….!!!