HomeTrending Newsஎப்பொழுது எனக்கு விக்கெட் வேண்டுமோ, அப்பொழுது இவரிடம் தான் பவுலிங் செய்ய விடுவேன் ; ஷ்ரேயாஸ்...

எப்பொழுது எனக்கு விக்கெட் வேண்டுமோ, அப்பொழுது இவரிடம் தான் பவுலிங் செய்ய விடுவேன் ; ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி ;

நேற்று நடந்த போட்டியின் விவரம் :

நேற்று இரவு 7:30 மணியளவில் நடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் :

ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் எதிர்பார்த்த அளவிற்கு சரியான தொடக்க ஆட்டத்தை ஆரம்பிக்கவில்லை என்பது தான் உண்மை. இருப்பினும் கேப்டன் போராடி அரைசதம் அடித்தார். ஆனால் சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் திணறியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இறுதிவரை போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டை இழந்த நிலையில் 152 ரன்களை அடித்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் அடித்த ரன்கள் விவரம் :

தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் 22, படிக்கல் 2 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர். பின்பு கிப்டான் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடிய 54 ரன்களை கைப்பற்றினார். பின்பு கருண் நாயர் 13, ரியல் பராக் 19, ஹெட்மயேர் 27 ரன்களை அடித்துள்ளனர்…!

கொல்கத்தா அணியின் இலக்கு :

153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. தொடக்க வீரரான பாபா இந்திரஜித் மற்றும் ஆரோன் பின்ச் எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டத்தை சிறப்பாக விளையாடவில்லை. பின்னர் விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ரானா, ரிங்கு சிங் போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால், 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா.

அதில் பாபா இந்திரஜித் 15, ஆரோன் பின்ச் 4, ஷ்ரேயாஸ் ஐயர் 34, நிதிஷ் ரானா 48, ரிங்கு சிங் 42 ரன்களை அடித்துள்ளனர்..!

புள்ளிபட்டியலில் விவரம் :

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளனர். அதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடிய நிலையில் 6 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 3வது இடத்தில் உள்ளனர்.

ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி :

பவர் ப்ளே முடிவில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்து 36 ரன்களை மட்டுமே கொடுத்து முக்கியமான விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். எனக்கு தெரிந்து அதுதான் நாங்கள் எதிர்பார்த்த ஒரு தொடக்க ஆட்டம் அமைந்தது. முதலில் இருந்து உமேஷ் யாதவ் சரியான லெந்த் வைத்து தான் பவுலிங் செய்து வருகிறார்.

ஒரு கேப்டனாக அவருக்கு சரியான நேரத்தில் பவுலிங் செய்ய வைக்கவேண்டும். நான் எப்பொழுதெல்லாம் நரேனிடம் பவுலிங் கொடுத்தாலும், எனக்காக விக்கெட்டை கண்டிப்பாக கைப்பற்றி கொடுப்பார், அவரது பவுலிங்கை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் நிச்சியமாக அடிக்கும் வாய்ப்பை கையில் எடுக்கமாட்டார்கள்.”

“அதுமட்டுமின்றி ரிங்குவிற்கு இது மூன்றாவது போட்டி தான், ஆனால் அவர் விளையாடிய விளையாட்டு மிகவும் அருமையாக இருந்தது தான உண்மை. அதுவும் அவர் ஆரம்பித்த விதம் பார்த்தால் புதிய வீரர் போலவே தெரியாது. போட்டி தொடங்கும் முன்பு ரிங்கு, மாவி மற்றும் அனுகுள் ஆகிய மூவரிடமும் ஒன்று மட்டும் தான் சொன்னேன், பீல்டிங் செய்யும்போது சரியான நேரத்தை பயன்படுத்தி செயல்பட வேண்டுமென்று.”

அதேபோல மாவி , பட்லரின் அடித்த பந்தை சரியாக கேட்ச் செய்துவிட்டார் என்று கூறியுள்ளார் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img