HomeIPLநாங்க கஷ்டமாக இருக்கும் நேரத்தில் எங்களுக்கு பக்கபலமாக இருப்பது இவர் மட்டும் தான் ; சஞ்சு...

நாங்க கஷ்டமாக இருக்கும் நேரத்தில் எங்களுக்கு பக்கபலமாக இருப்பது இவர் மட்டும் தான் ; சஞ்சு சாம்சன் பேட்டி ;

ஐபிஎல் 2022: புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கென் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோதின.

அதில் டாஸ் சன்ரைசர்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய தொடங்கினார்கள். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் பேட்ஸ்மேன் அனைவரும் ரன்களை அடித்தனர். ஆமாம் தொடக்க வீரரில் இருந்து இறுதியாக விளையாடிய பவுலர்கள் வரை பந்தை வீண்செய்யாமல் ரன்களை விளாசினார்கள்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 210 ரன்களை அடிக்க முடிந்தது. அதில் ஜோஸ் பட்லர் 35, ஜெய்ஸ்வால் 20, சாம்சன் 55, படிக்கல் 41, ஹெட்மயேர் 32, ரியன் பராக் 12 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சன்ரைசர்ஸ் அணி.

ஆனால் தோல்வியே மிஞ்சியது. ஆமாம், இறுதி அவரை போராடிய சன்ரைசர்ஸ் அணி 149 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றினர். சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் 57, வாஷிங்டன் சுந்தர் 40 ரன்களை அடித்துள்ளார்.

பின்னர் போட்டி முடிந்த பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் ;

“இந்த முறை நாங்க நினைத்த படி விக்கெட் போகவில்லை. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் கிடைத்தது மகிழ்ச்சி. இந்த முறை பெரிய கனவு என்று ஒன்று இல்லை. எங்கள் வெற்றியை எங்கள் அணி வீரர்கள் கொண்டாட வேண்டும். என்னால் முடிந்த வரை விக்கெட்டை இழக்காமல் விளையாடி வந்தேன்.”

“நாங்கள் சோர்வாக இருக்கும் நேரத்தில் எங்கள் பயிற்சியாளர் (குமார் சங்கக்கார )எப்பொழுது எங்களை ஆதரித்து கொண்டே தான் இருப்பார். நாங்கள் தோல்வி பெற்றாலும் வெற்றி பெற்றாலும் அவரது ஆதரவு எப்பொழுதும் இருக்கும். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் நங்கள் பல கனவுடன் வந்துள்ளோம். “

“அதனால் போட்டிகளில் வெற்றி பெறுவது மட்டுமே எங்கள் எண்ணம். அதனை தவிர்த்து எதிர்காலத்தில் நடக்கும் விஷயத்தை பற்றி இப்பொழுது நங்கள் யோசிக்கவில்லை என்று கூறியுள்ளார் சஞ்சு சாம்சன். “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img