கேப்டனாக இருக்கும் போது விராட்கோலிக்கு இதை பற்றி யோசிக்கவில்லை ; ஆனால் இனிமேல் விராட்கோலி சந்திக்க போகும் மிகப்பெரிய பிரச்சனை இதுதான் ; முழு விவரம் இதோ ;

0

இந்திய மற்றும் தென்னாப்பிரிவுக்கா அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்லும் என்று பலர் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்தன. ஏனென்றால் இதுவரை தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கான தொடரில் வென்றதே இல்லை.

முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி வென்றது. ஆனால் அதனை தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை பெற்றுள்ளது. அதனால் 1 – 2 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றவில்லை. இதனை மனதில் கொண்டு இந்திய அணியின் கேப்டனான விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அதனால் அடுத்த கேப்டன் யார் என்ற சர்ச்சை இப்பொழுது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இனி வரும் போட்டிகளில் விராட்கோலி வெறும் ப்ளேயர் ஆக விளையாட போகிறார். ஆனால் அதில் இருக்கும் சிக்கலை பற்றி இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அளித்த பேட்டியில் ;

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கேப்டன் பத்தியில் இருந்து விலகியுள்ளார் விராட்கோலி. இவர் இப்படி செய்தது பலருக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் எவ்வளவு விரைவாக இந்த முடிவை கையில் எடுப்பார் என்று நான் கூட நினைத்து பார்க்கவில்லை. ஆனால் விராட்கோலி இதுவரை அவர் என்ன நினைத்தாரோ அதன்படி தான் விளையாடி வருகிறார்.

கேப்டனாக இருக்கும்போது அவருக்கான மதிப்பு வேறு, அதே ஒரு ப்ளேயர் ஆக களமிறங்கும்போது பல பிரச்சனை அதில் உள்ளது. ஏனென்றால் கேப்டனாக இருக்கும்போது எப்படி விளையாடினாலும் அணியில் இடம்பெறுவதை பற்றி யோசிக்கவேண்டியது இல்லை.

ஆனால் இப்பொழுது அந்த அழுத்தம் விராட்கோலிக்கு வந்துள்ளது. ஆமாம் ..! இனிவரும் போட்டிகளில் சிபிராக விளையாடியே ஆக வேண்டும்.கடந்த 7 ஆண்டுகளாக கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் களமிறங்கி விளையாடியுள்ளார் விராட்கோலி. இதை தொடர்ந்து செய்தால் போதும், விராட்கோலி-க்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் விளையாட உள்ளனர். அதில் ஒருநாள் மற்றும் டி-20 ஆகிய இரு அணிகளும் விராட்கோலி இடம்பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, கடந்த 8 போட்டிகளில் 6 அரைசதம் அடித்துள்ளார் விராட்கோலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here