இந்திய கிரிக்கெட் கடந்த சில தொடர் போட்டிகளில் வெற்றிகளை கைப்பற்றி வருகின்றனர். ஆமாம், தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியை கைப்பற்ற வேண்டிய சூழ்நிலையில் எதிர்பாராத விதமான மழை வந்த காரணத்தால் தொடர் சம நிலையில் முடிந்துள்ளது.


அதனை தொடர்ந்து இப்பொழுது தான் அயர்லாந்து அணிக்கு எதிரான இரு டி-20 போட்டிகளிலும் இந்திய அணி வென்ற காரணத்தால் தொடரை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது இந்திய.
சமீபத்தில் தான் இந்திய அணிக்கான கேப்டன் பற்றிய சர்ச்சை முடிந்துள்ளது. ஆமாம், தொடக்கத்தில் விராட்கோலி கேப்டனாக விளையாடி வந்தார். பின்பு சில பிரச்சனை காரணமாக இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம் செய்துள்ளது பிசிசிஐ.


இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆமாம், கே.எல்.ராகுலுக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற போவதில்லை என்று சில தகவல் வெளியாகியுள்ளது.
ஷிகர் தவானுக்கு இப்பொழுதெல்லாம் இந்திய அணியில் வாய்ப்பு கொடுப்பதே இல்லை. தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது தொடக்க வீரர்கள் பட்டியல். இப்பொழுது தான் இஷான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மா போன்ற இருவரும் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.


ஆனால் இஷான் கிஷான் அவ்வப்போது தான் ரன்களை அடித்து வருகிறார். ஒரு சில போட்டிகளில் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டத்தை இழந்து வருகிறார். ஆனால் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய தீபக் ஹூடா சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தினார்.
ஆமாம், முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 47 ரன்களை அடித்தார். அதேபோல இரண்டாவது டி-20 போட்டியில் களமிறங்கிய தீபக் ஹூடா சதம் அடித்துள்ளார் (104). இது போன்ற தொடக்க ஆட்டம் இந்திய அணிக்கு அமைந்தால் நிச்சியமாக வெற்றிக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ரோஹித் ஷர்மாவுடன் யார் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!