ஐபிஎல் 2021 ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர். 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இதுவரை 16 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற ஐபிஎல் 2021, சில தினங்களுக்கு முன்பு சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் நட்ராஜனுக்கு காலில் அடிபட்ட காரணத்தால் மீதமுள்ள போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி 3 போட்டிகளில் தோல்வியை பெற்று ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதனால் புள்ளிபட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இப்பொழுது நட்ராஜன் அணியில் இல்லாததால் அவருக்கு பதிலாக யார் இடம்பெறுவார் ? என்ற கேள்வி எழுகிறது.
அதன்வாய்ப்பை இந்த மூன்று வீரர்களுள் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்க அதிகம் வாய்ப்புள்ளது. அதில் இருக்கும் முதல் வீரர் ; மோஹித் சர்மா , இவர் இதுவரை 86 போட்டிகளில் விளையாடி 92 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் அதிபட்சமாக 2014ஆம் ஆண்டு 24 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
இரண்டாவதாக வருண் ஆரோன் ;
அதிக அனுபவம் இருக்கும் வீர்ரகளுள் இவரும் ஒருவர். இதுவரை 50 போட்டிகளில் விளையாடிய வருண் ஆரோன் 42 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணி, மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் விளையாடியுள்ளார்.
மூன்றவதாக ; அங்கித் சிங் ராச்பூத் ;
இதுவரை 29 போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் 24 விக்கெட் மட்டுமே கைப்பற்றியுள்ளார் அங்கித் சிங் ராச்பூத். இவர் 2013ஆம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும், 2016,2017 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் விளையாடியுள்ளார்.
இந்த மூவரில் யார் இடம்பெறுவார்கள் என்ற குழப்பத்தி உள்ளனர், சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி. அடுத்த போட்டி ஏப்ரல் 25ஆம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி.