HomeTrending Newsவிக்கெட்டை கைப்பற்ற இவர் அணியில் இருக்கும்போது, அதை ஏன் தவிர்த்து வருகிறார் தவான் ? முன்னாள்...

விக்கெட்டை கைப்பற்ற இவர் அணியில் இருக்கும்போது, அதை ஏன் தவிர்த்து வருகிறார் தவான் ? முன்னாள் வீரர் ஆவேசம் ;

இன்று இரவு 7 மணியளவில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளனர். இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வென்று 2 – 0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது.

அதனால் இன்றைய போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்க வாய்ப்பு இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி சுலபமாக ஒன்றும் வெற்றிபெறவில்லை. கொஞ்சம் தவறவிட்டிருந்தால் தோல்வி தான் கிடைத்திருக்கும்.

ஏனென்றால் முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய. அதிலும் குறிப்பாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் தவித்தது இந்திய.

தொடக்கத்தில் ஷாய் ஹோப் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை குவித்தனர். சரியாக மிடில் ஓவர்களில் ரன்களை அடிக்க முடியாமல் திணறிக்கொண்டே இருந்தது இந்திய. இதற்கு முக்கியமான காரணம் தவான் சரியாக முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக்.

இதனை பற்றி மேலும் பேசிய அவர் : “ஒருநாளை போட்டிகளில் மிகவும் முக்கியமான ஒன்று மிடில் ஓவர்களில் விக்கெட்டை கைப்பற்றுவது தான். அதிலும் உங்களால் விக்கெட்டை கைப்பற்ற முடியும் என்றால், அதனை தான் முதலில் செய்திருக்க வேண்டும். பிறகு ஏன் வெஸ்ட் இண்டீஸ் அணியை டி-20 போட்டிகளில் விளையாடுவது போல செய்தீர்கள் ?”

“நான் தீபக் ஹூடா பவுலிங் பற்றி எந்த குறையும் சொல்லவில்லை. இந்திய அணியில் யார் சிறந்த சுழல் பந்து வீச்சாளர் ? சஹால் பவுலிங் செய்ய எதற்கு தாமதம் ? ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய தவறே மிடில் ஓவர்களில் விக்கெட்டை கைப்பற்றுவது தான். அதில் சஹால் போன்ற வீரர் இருக்கும்போது ஏன் பயன்படுதில்லை ? என்று கேள்வி கேட்டுள்ளார் முரளி கார்த்திக்.”

யுஸ்வேந்திர சஹால் இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நிலையில் 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். நாளை மறுநாள் நடைபெற உள்ள டி-20 போட்டிக்கான இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img