சுத்த முட்டாள் தனமாக இருக்கிறது சன்ரைசர்ஸ் சூப்பர் ஓவரில் மோசமான தோல்விக்கு இதுதான் காரணம் ; வீரேந்திர சேவாக்…!
நேற்று சென்னையில் உள்ள சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியும், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 159 ரன்களை அடித்துள்ளனர். அதில் ப்ரிதிவி ஷா 53 ரன்கள், தவான் 28 ரன்கள், ரிஷாப் பண்ட் 37 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்கள் அடித்துள்ளனர்.
பின்பு 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி, 20 ஓவர் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை போல 159 ரன்களை அடித்துள்ளனர். அதனால் போட்டி சமமாக முடிந்ததால் சூப்பர் ஓவர் நடைபெற்றது.
சூப்பர்-ஓவரில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி 8 ரன்களை மட்டுமே அடித்தனர். அதன்பின்னர் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றியை கைப்பற்றியது. வெற்றியை கைப்பற்றிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் அணி 7வைத்து இடத்தில உள்ளது.
இந்த போட்டியை பற்றி பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர சேவாக் ; சன்ரைசர்ஸ் தோல்வியை குறித்து பேசிய சேவாக், ஏன் சூப்பர்-ஓவரில் பரிஸ்டோவ் பேட்டிங் செய்யவில்லை ? அதற்கு பதிலாக வார்னர் களமிறங்கியுள்ளார்.
டெல்லிக்கு எதிரான போட்டியில் பாரிஸ்டவ் 18 பந்தில் 38 ரன்களை விளாசியுள்ளார். பெர்ஸ்டோவ் கழிப்பறையில் இல்லாவிட்டால், சூப்பர் ஓவரில் அவர் ஏன் உங்கள் முதல் தேர்வாக இருக்க மாட்டார் ?? என்று கூறியுள்ளார் சேவாக்.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய பரிஸ்டோவ் 211 ரன்களை விளாசியுள்ளார். அதில் அதிகபட்சமாக 63 ரன்களை அடித்துள்ளார், 14 சிக்சர் மற்றும் 15 பவுண்டரிகள் அதில் அடங்கும்.