சமீபத்தில் ஐபிஎல் போட்டியை கொரோனா காரணமாக நிறுத்தியுள்ளது பிசிசிஐ . அதனால் இப்பொழுது உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியை முதலில் நடத்தி விடலாம் என்று முடிவு செய்த பிசிசிஐ , வருகின்ற ஜூன் 18ஆம் தேதி நியூஸிலாந்து அணியை எதிரொக்ள்ள போகிறது இந்திய அணி.
நேற்று பிசிசிஐ, இந்திய அணியில் யார் யார் டெஸ்ட் போட்டியில் விளையாட போகிறார் என்று கூறியுள்ளது. அதில் இந்திய அணியின் முக்கியமான வீரரான ஹார்டிக் பாண்டிய டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேற்றியுள்ளது பிசிசிஐ.
அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஏன் ஹார்டிக் பாண்டிய அணியில் இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான பிசிசிஐ சம்பள பட்டியலில் 3 கோடி ரூபாயில் இருந்து 5 கோடிக்கு உயர்ந்துள்ளார் ஹார்டிக் பாண்டிய.
ஆனால் , இப்பொழுது சம்பளத்தை ஏற்றிவிட்டு இப்பொழுது இந்திய அணியில் இருந்து ஏன் இல்லை. அதற்கு பதிலளித்த பிசிசிஐ, ஐபிஎல் 2021 முன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹார்டிக் பாண்டியாவின் ஆட்டம் சரியாக விளையாடவில்லை.
அதனால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மட்டுமின்றி ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அவர் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஹார்டிக் பாண்டியாவின் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்திய அணியின் வீர்ரகள் பட்டியல் :
ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை-கேப்டன்), சுமன் கில், மயங்க அகர்வால், புஜாரா, ஹனுமா விகாரி, ரிஷப் பண்ட் (விக்கெட்-கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சார் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமத் ஷமி , முகமத் சிராஜ், தாகூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் மற்றும் சஹா.