இந்திய அணியில் இவர் இல்லாதது மிகப்பெரிய இழப்பு தான் ; பும்ராவிற்கு அடுத்தது இவர் தான் ; முன்னாள் வீரர் பேட்டி ;

0

ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் குரூப் ‘ஏ’ பிரிவில் இந்திய கிரிக்கெட் அணியும், குரூப் ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான் அணியும் முதல் இடத்தில் உள்ளனர். இன்று இரவு நடைபெற உள்ள போட்டியில் பங்களாதேஷ் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளனர்.

இந்திய அணியின் விவரம் :

கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று ஆசிய கோப்பைக்கான போட்டியில் பங்கேற்க போகும் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் கேப்டன் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, ரிஷாப் பண்ட், தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவி பிஷானி, சூரியகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதில் முன்னணி வீரரான பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆசிய கோப்பைக்கான தொடரில் பங்கேற்க முடியாது என்று பிசிசிஐ அறிவித்தது. அதுமட்டுமின்றி முன்னணி பவுலர் இவர் இல்லாதது இந்திய அணியின் மிகப்பெரிய தப்பு என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான மதன் லால் கூறியுள்ளார்.

மேலும் இதனை பற்றி பேசிய மதன் லால் கூறுகையில் ; “நிச்சியமாக முகமத் ஷமி இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள உலகக்கோப்பை டி-20 போட்டிகளில் விளையாட வேண்டும். பும்ராவிற்கு அடுத்த சிறந்த பவுலர் ஷமி தான். என்னை பொறுத்தவரை ரன்களை கட்டுப்படுத்தும் பவுலரை விட விக்கெட்டை கைப்பற்றும் வீரர்கள் மிகவும் முக்கியமான ஒன்று.”

“ஏனென்றால் பேட்ஸ்மேன்கள் எப்படி இருந்தாலும் ரன்களை அடித்து கொண்டே தான் இருப்பார்கள். அவர்களை கட்டுப்படுத்த நிச்சியமாக விக்கெட்டை கைப்பற்றியே ஆக வேண்டும். ஒருவேளை உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் மட்டும் ஷமி இடம்பெறவில்லை என்றால் நிச்சியமாக அது பெரிய தவறாக இருக்கும்.”

“இந்திய அணியின் சிறந்த பவுலர் ஷமி, ஆஸ்திரேலியாவிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால் அவரை ஏன் டி-20 போட்டிகளில் மட்டும் தேர்வு செய்வது இல்லையென்று தான் தெரியவில்லை. இப்பொழுது விளையாடும் வீரர்களை விட ஷமி மோசமான நிலையில் விளையாடுகிறாரா ? உலக கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பவுலர் ஷமி என்று கூறியுள்ளார் மதன் லால்.”

ஒருவேளை காயம் காரணமாக உலகக்கோப்பை போட்டிகளிலும் பும்ரா இடம்பெறவில்லை என்றால் நிச்சியமாக முகமத் ஷமிக்கு வாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் இருக்கும். என்ன செய்ய போகிறது இந்திய கிரிக்கெட் அணி ? மற்ற வீரர்களை விட ஷமி சிறந்த பவுலரா ? எதற்கு ஷமி இடம்பெற வேண்டும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here