உடனடியாக இந்திய அணியில் இருந்து இவரை வெளியேற்றுங்கள் ; ரோஹித் சர்மாவுக்கு ரசிகர்கள் கோரிக்கை ; என்ன இப்படி விளையாடிட்டு இருக்காரு?

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை 2022 போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முறை இலங்கையில் நடக்கவேண்டிய ஆசிய கோப்பை போட்டிகள் பொருளாதார சிக்கல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்துள்ளனர்.

அதன்படி கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது. இதுவரை இந்திய கிரிக்கெட் அணி இரு போட்டிகளில் விளையாடிய இரண்டிலும் வெற்றியை கைப்பற்றியுள்ளது.

அதனால் குரூப் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய. அதனால் தீவிரமான பயிற்சியிலும் ஆலோசனையிலும் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

சொதப்பலாக விளையாடி வரும் இந்திய அணியின் தொடக்க வீரர் :

Kl Ragul

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு காயம் காரணமாக இந்திய அணியில் விளையாடாமல் இருந்தார் கே.எல்.ராகுல். பின்பு கொரோனா தொற்று உறுதியான நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் விளையாட முடியாமல் போனது. ஆனால் ஆசிய கோப்பை போட்டியிலும் மட்டும் அவரது பெயர் இடம்பெற்றது.

பின்பு ஜிம்பாபே தொடரில் கே.எல்.ராகுல் விளையாடி அனுபவம் பெறட்டும் என்று பிசிசிஐ முடிவு செய்த காரணத்தால் ஜிம்பாபே தொடரின் கேப்டனாக கே.எல்.ராகுலை நியமனம் செய்தது பிசிசிஐ. அதில் 1, 30 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். அப்படி இருக்கும் நிலையில் ஆசிய கோப்பை போட்டிக்கான ப்ளேயிங் 11ல் இடம்பெற வாய்ப்பு குறைவாக தான் இருக்கும் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்தனர்.

ஆனால் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய கே.எல்.ராகுல் முதல் பந்தில் பெல்ட் அவுட் ஆனார். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. பின்பு நேற்று நடந்த போட்டியில் ஹாங் காங் அணியும், இந்திய அணியும் மோதின.

அதில் விளையாடிய கே.எல்.ராகுல் மிகவும் நிதானமாக விளையாடி கொண்டு வந்தார். சிக்ஸர், பவுண்டரிகளை அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தார் ராகுல். ஆனால் ஒரு நோ பால் கிடைத்ததை பயன்படுத்திய கே.எல்.ராகுல் சிக்ஸர் அடித்தார். அப்படி என்றால் கே.எல்.ராகுலுக்கு அதிரடியாக விளையாடுவது சிரமமா ? பயமா?

36 பந்தில் 39 ரன்களை அடித்துள்ளார். அதில் இரு சிக்ஸர் மட்டுமே அடித்துள்ளார், அதிலும் ஒரு நோ பால் சிக்ஸர். இதனால் இவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் -க்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சியமாக கே.எல்.ராகுலை விட சிறப்பாக விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் ஏன் இவருக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வருகிறார் ? ரோஹித் சர்மா ?

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க இனிவரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு கே.எல்.ராகுல் மிகவும் முக்கியமான வீரரா ? இல்லையா? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here