WTC 2021 : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, வருகின்ற 18ஆம் தேதி முதல் 22ஜூன் வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர் இந்திய அணியின் வெற்றிக்கு. வெற்றிபெறுமா? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
சமீபத்தில் பிசிசிஐ, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்க போகின்ற இந்திய அணியின் விவரத்தை வெளியிட்டது. அதில் ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை -கேப்டன்), சுமன் கில், மயங்க அகர்வால், புஜாரா, ரிஷாப் பண்ட் , அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமத் ஷாமி, முகமது சிராஜ், தாகூர் மற்றும் உமேஷ் யாதவ் இடம் பெற்றுள்ளனர்.
வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்ட பிறகு, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா, அவரது கருத்தை கூறியுள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏன் குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னை பொறுத்த வரை, குல்தீப் யாதவ் மிகவும் சிறப்பான சூழல் பந்து வீச்சாளர். சமீபத்தில் அவருக்கு மிகவும் குறைவான போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார். அதில் அவர் அவரது திறமையை வெளிப்படுத்தவில்லை என்று சொல்ல முடியாது.
பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டி முழுவதும் விளையாடவில்லை என்றாலும், ஒரு சில போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அதிலும் அவர் இரண்டு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் குல்தீப் யாதவ். இப்பொழுது இந்திய அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நான்கு சூழல் பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய வீரர்கள் உள்ளனர். ஆனால் குல்தீப் யாதவ் இல்லாதது இந்திய அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.