கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது. ஆனால் மூன்றாவது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆனால் இந்திய ? இன்னும் மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றியை கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால் வருகின்ற 9ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் ராகுல் டிராவிட்-ன் பங்களிப்பு பெரிய அளவில் இல்லாத காரணத்தால் அரையிறுதி சுற்றுகளில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ளது.
அதனால் ராகுல் டிராவிட்-க்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்புகள் வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் “ஆமாம், இந்திய அணியில் இரு கேப்டன்கள் இருக்கின்றனர், அதனால் இரு பயிற்சயாளர்கள் இருக்கலாம் தப்பு கிடையாது. பிரண்டன் மெக்குலம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். அதேபோல இந்திய அணியின் சேவாக் அல்லது நெஹ்ரா இடம்பெற வேண்டும்.”
“ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகம் அணி குஜராத் டைட்டன்ஸ். அதிலும் முதல் ஐபிஎல் போட்டியிலேயே கோப்பையை வென்றுள்ளனர். அதனால் டி-20 போட்டியை சிறப்பாக புரிந்து வைத்துள்ள நெஹ்ரா அணியின் பயிற்சியாளராக இருக்கலாம்.”
“டி-20 போட்டியில் நெஹ்ராவும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட்-ம் பயிற்சியாளராக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.”