ஐபிஎல் 2021; விளையாடனும் என்று ஆசைப்பட்ட நபருக்கு வாய்ப்பை மறுத்த தோனி ; காரணம் இதோ….!!

ஐபிஎல் 2021; விளையாடனும் என்று ஆசைப்பட்ட நபருக்கு வாய்ப்பை மறுத்த தோனி ; காரணம் இதோ….!!

இந்தியாவில் ஐபிஎல் 2021 சிறப்பான முறையில் இருநாட்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டி தொடங்கியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கிட்டத்தட்ட இரு மாதங்கள் (ஏப்ரல் 9ஆம் முதல் மே 30வரை) நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

சிஎஸ்கே அணியிக்கு கடந்த ஆண்டு தான் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மோசமான ஆண்டாக இருக்கும் என்பதை மாற்றுக்கருத்தில்லை. ஏனென்றால் இதுவரை நடந்த ஐபிஎல் 13 சீசனில் கடந்த ஆண்டு தான் முதல் முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது.

அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே அணியின் வீரர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஏனென்றால் அதுதான் முதல் முறை என்பதால். இருந்தாலும் இந்த ஆண்டு நிச்சியமாக நல்ல ஒரு காம்பேக் கொடுக்க வேண்டும் என்று நினைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து பயிற்சி செய்து வருகின்றனர். அதன்விளைவாக முதல் போட்டியில் 188 ரன்களை விலகியுள்ளார். இருந்தாலும் தோல்வியை தான் சந்தித்தது. கடந்த ஆண்டு போல் இல்லாமல் , இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் முக்கியமான வீரர்கள் சென்னை அணியில் எடுத்துள்ளனர்.

அதில் ராபின் உத்தப்பா, மெயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம் , ஹரி ஷங்கர் ரேடிய போன்ற வீரர்கள் அதில் அடங்கும். ராபின் உத்தப்பா சென்னை அணியில் எடுத்த உடன். சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று பகிர்ந்துள்ளார். அதில் நான் சிஎஸ்கே அணியில், தோனி கேப்டன்ஷிப் கீழே விளையாடவிட்டது எனக்கு சந்தோசமாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி எனக்கு நிச்சியமாக டோனி வாய்ப்பு கொடுப்பர், நான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக விளையாட மிகவும் ஆவலாக இருக்கிறேன். அதுமட்டுமின்றி இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

ஆனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் 2021 போட்டியில் ராபின் உத்தப்பா இல்லாதது மிகவும் ஆச்சரியமாக தான் இருந்தது என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல் சில போட்டிகளில் வெற்றியை கைப்பற்றிவிட்டால் போதும்.

அதன்பின்னர் வரும் போட்டிகளில் புதிய வீரர்களுக்கு சில போட்டிகளில் இடம் நிச்சியமாக கிடைக்கும். அப்படி செய்தால் யார் யார் விளையாட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி. இதனால் ரசிகர்கள் ; தோனி சரியான முடிவு தான் எடுப்பார் என்று தோனியை பாராட்டி வருகின்றனர்.