இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி அன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணியும் நியூஸிலாந்து அணியும் மோதி உள்ளன.
இந்த போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்அம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா ? இல்லையா ? என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
இந்திய அணி விவரம் :
சமீபத்தில் பிசிசிஐ, இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் முக்கியமான வீரரான ஹார்டிக் பாண்டிய இல்லாதது இந்திய ரசிகர்கள் இடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் அவர் இல்லை என்ற கேள்விக்கு ? பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
ஹார்டிக் பாண்டிய கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சரியாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யவில்லை. அதனால் தான் அவரை இந்த முறை அணியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
இந்திய அணியில் : ரோஹித் சர்மா, சுமன் கில், மயங்க அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), விஹாரி, ரிஷாப் பண்ட், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகம்மது ஷாமி, முகம்மது சிராஜ், தாகூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், சஹா, பிரஷித் கிருஷ்ணா, அவேஷ் கான்.
இந்திய அணியில் இருந்து எப்படி இவர் இல்லை, டெஸ்ட் போட்டிகளில் இவர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அது யார்?
இந்திய அணியை பற்றி பேசிய ஆகாஷ் சோப்ரா ; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 5 டெஸ்ட் சீரியஸ் போட்டிகளில் இருந்து குல்தீப் யாதவ் அணியில் இல்லாதது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவரது ஆட்டம் சரியாக இல்லாததால், வாய்ப்புகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது.
ஜனவரி மாதத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான சீரியஸ் போட்டிகளில் வெறும் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே குல்தீப் விளையாடியுள்ளார். அதில் வெறும் இரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றியுள்ளார். அதனால் அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இந்திய அணியில் 4 பவுலர்கள் இருக்கின்றனர். ஜடேஜா, அஸ்வின், வாஷிங்டன் சுந்தர்,மற்றும் அக்சர் பட்டேல் போன்ற சூழல் பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர். ஆனால் ஏன் wrist ஸ்பின்னர் அணியில் யாரும் இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.