இவர் இல்லாமல் இந்திய அணி எப்படி WTC 2021 கோப்பையை வெற்றிபெறும் ; முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து..! யார் அந்த வீரர் ?

WTC 2021; வருகின்ற ஜூன் 18 தேதி முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் யார் வெற்றியை கைப்பற்றி கோப்பையை வெல்ல போகிறார்கள் என்று மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்துக்கு பிறகு இங்கிலாந்து அணியை டெஸ்ட் சீரியஸ் போட்டியில் எதிர்கொள்ள போகிறது இந்திய. சமீபத்தில் இதற்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. வீரர்கள் பட்டியலில் சில வீரர்கள் இல்லாததால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்தை பகிர்ந்து வருகின்றார்.

அதன் வரிசையில், பாக்கிஸ்தான் அணியின் சூழல் பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா அவரது கருத்தை கூறியுள்ளார். அதில் இந்திய அணியின் டெஸ்ட் உலக போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் ஏன் இவருக்கு இடம் இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் ??

அதற்கு பதிலளித்த கனேரியா ; இந்திய அணி தேர்வு செய்தது மிகவும் வலுவான அணியாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்களிடம் wrist சூழல் பந்து வீச்சாளர் என்று யாரும் இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என்று கூறியுள்ளார் பாக்கிஸ்தான் முன்னாள் வீரர்.

இந்திய அணியில் சில சூழல் பந்து வீச்சாளர் உள்ளனர் ; அஸ்வின், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகிய வீரர்கள் உள்ளனர். ஆனால் இவர்கள் யாரும் Wrist சூழல் பந்து வீச்சாளர் இல்லை. அதனை சுட்டிக்காட்டி பேசிய கனேரியா, இங்கிலாந்து அணியின் மைதானத்தில் சூழல் பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருக்கும்.

அதுமட்டுமின்றி wrist சூழல் பந்து வீச்சாளரான ராகுல் சாகர் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். சமீபகாலமாக மும்பை இந்தியன்ஸ் அணியாக இருக்கட்டும் இந்திய அணியாக இருக்கட்டும் இவரது ஆட்டம் அருமையான ஒன்றாக இருந்துள்ளது.

ஒருவேளை ஏதாவது வீரருக்கு அடிபட்டு மாற்று வீரராக நிச்சியமாக ராகுல் சஹாருக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் பாக்கிஸ்தான் அணியின் சூழல் பந்து வீச்சாளர் கனேரியா..!