HomeTrending Newsஇவருக்கு எதற்கு ஓய்வு கொடுத்தீங்க ? ஒழுங்கவே விளையாடுறது இல்லை ; முன்னாள் இந்திய கேப்டன்...

இவருக்கு எதற்கு ஓய்வு கொடுத்தீங்க ? ஒழுங்கவே விளையாடுறது இல்லை ; முன்னாள் இந்திய கேப்டன் வருத்தம் ;

வெஸ்ட் இண்டீஸ் சீரியஸ் :

இந்திய கிரிக்கெட் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் இன்று நடைபெற உள்ளது. அதில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளனர்.

மொத்தம் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. இங்கிலாந்து அணியை வென்றது போலவே வெஸ்ட் இண்டீஸ் அணியை வெல்லுமா இந்திய ? ஒருநாள் போட்டிகளில் மோசமான நிலையில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சுலபமாக வென்றுவிடுமா இந்திய ?

ஏனென்றால், இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரரான விராட்கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளனர். அதிலும் விராட்கோலி டி-20 போட்டிகளில் விளையாட போவதில்லை. ஆனால், ரோஹித் மற்றும் பும்ரா போன்ற வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர்.

விராட்கோலியின் விளையாட்டு கடந்த சில போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் விளையாடி வந்துள்ளார்…!

இப்படி இருக்கும் நிலையில், விராட்கோலி-க்கு ஓய்வு கொடுப்பது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் ? இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கேப்டனான திலிப் பால்வான்ட் வெங்சர்க்கார் ; விராட்கோலி-க்கு எதற்கு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஏன் ஓய்வு கொடுத்தீங்க ?? என்று கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் இதனை பற்றி பேசிய அவர் ; ” எனக்கு இன்னும் புரியவில்லை, இந்திய அணியின் தேர்வாளர்கள் ஏன் விராட்கோலி-க்கு வெஸ்ட் இண்டீஸ் தொடர் முழுவதும் ஓய்வு கொடுத்திருக்கிங்க ? ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை போட்டியில் விராட்கோலி விளையாட போகிறார் என்றால், அதற்கு முன்பு முடிந்த வரை அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும்.”

“அதனால் அவருக்கு போர்மில் கம்பேக் கொடுக்க முடியும். ஆனால் அதற்கு பதிலாக ஓய்வு கொடுத்தது தவறாக தெரிகிறது. இப்படி நடந்தால் நிச்சியமாக ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்துவிடுவார். ஒருவீரர் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால், முடிந்தவரை அனைத்து போட்டிகளிலும் விளையாடி ரன்களை அடிக்க வேண்டும்.”

“அதிக போட்டிகளில் விளையாடினால் தான் அவருக்கு அவரது விளையாட்டில் நம்பிக்கை எழும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று கூறியுள்ளார் திலீப் பால்வான்ட் வெங்சர்க்கார்.” விராட்கோலி இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடுவாரா ? இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img