தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தான் போல… அடித்து சொல்லும் முக்கியமான காரணங்கள்..! இதோ..!

தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தான் போல… அடித்து சொல்லும் முக்கியமான காரணங்கள்..! இதோ..!

ஐபிஏல் 2021; இந்தியாவில் 2008ஆம் ஆரம்பித்த ஐபிஎல் டி-20 போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் 2021க்கு கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருந்தனர்.

அத்திரு முக்கியமான காரணம் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்றது. அதனால் மீண்டும் இந்தியாவில் நடைபெற போகிறது என்று பிசிசிஐ சொன்ன உடன், ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் சந்தோசம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாட்டில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் தோனிக்கு அவ்ளோதான் அவருக்கு வயதாகிவிட்டது. அதனால் இனிமேல் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நான் கண்டிப்பாக 2021ஆம் ஆண்டு நிச்சயமாக நான் சிஎஸ்கே அணியில் விளையாடுவேன் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறி இருந்தார். ஆனால் இறுதினங்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் 2021 போட்டியில் ; ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட் விதியசத்தில் வென்றது. அந்த போட்டியிலும் டோனி ஒரு ரன்கள் கூட அடிக்காமல் ஆட்டம் இழந்தார். அதனால் ரசிகர்கள் இனிமேல் தோனி பேட்டிங் செய்யமாட்டார் என்று சமுகவலைத்தளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இன்னொரு பிரச்சனையும் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, வருகின்ற மே மாதத்தில் புதிதாக இரு அணிகள் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடந்த நிச்சியமாக ஐபிஎல் 2020 ஏலம் மிகப்பெரிய அளவில் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்ல.

அப்படி ஏலம் நடந்தால் நிச்சியமாக அணியில் வெறும் 3 வீரர்களை மட்டும்தான் வைத்துக்கொள்ள முடியும். அப்படி பார்த்தால் தோனி , சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா வாக கூட இருக்கலாம். ஆனால் இதில் தோனி மாற்றும் ரெய்னா சர்வதேச போட்டியில் இருந்து விலகி உள்ளார்கள்.

அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டியிலேயே மிகவும் அதிக வயதுடையவர்களில் தோனியும் ஒருவர் தான். அதனால் என்னுடைய வாய்ப்பை வேற ஒரு வீரருக்கு கொடுங்கள் என்று கூட தோனி சொல்லலாம். அதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.