HomeTrending Newsஇவர் இடம்பெற்றிருந்தால் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றிருக்கும் ; அணியை தேர்வு செய்ததில் தான் தவறு...

இவர் இடம்பெற்றிருந்தால் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றிருக்கும் ; அணியை தேர்வு செய்ததில் தான் தவறு ; ரவி சாஸ்திரி பேட்டி ;

ஆசிய கோப்பை 2022: ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால் சந்தேகம் தான்.

Ravi sastri

ஆசிய கோப்பை லீக் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகளுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய. ஆனால் சூப்பர் 4 சுற்றில் மோசமான நிலையில் விளையாடி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி.

ஆமாம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் பவுலிங்கில் சொதப்பியது இந்திய என்பது தான் உண்மை. ஏனென்றால் இரு போட்டிகளில் இறுதி ஓவர் வரை போராடிய பிறகு தான் தோல்வியை கைப்பற்றியது இந்திய.

என்னதான் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பவுலிங் மிகவும் மோசமான நிலையில் உள்ளது தான் உண்மை. அதற்கு முக்கியமான காரணம் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் போன்ற முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவர்களால் ஆசிய கோப்பைக்கான போட்டிகளில் விளையாட முடியாமல் போனது தான் காரணம்.

அதனால் இந்திய கிரிக்கெட் அணி ஆவேஷ் கான், அர்ஷதீப் சிங் போன்ற புதிய வீரர்களை வைத்து தான் விளையாடி வந்தனர். ஆனால் இந்த இரு வீரர்களும் அதிகப்படியான ரன்களை கொடுத்துள்ளனர். முன்னணி வீரர்கள் இல்லாத நேரத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சியமாக இந்திய அணி வலுவாக இருந்திருக்க வாய்ப்பு கிடைக்கும்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் ; ” எனக்கு ஒரு ஆச்சரியம் மட்டும் தான் அனுபவம் வாய்ந்த முகமது ஷமி ஏன் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை ? நிச்சியமாக இது இந்திய அணியின் நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் இதனை பற்றி யோசிக்கவில்லை.”

“எதிர்பார்த்த அளவிற்கு இந்த ஆண்டு ஆசிய கோப்பை 2022ல் பவுலிங் இல்லை என்பது தான் உண்மை. அனுபவம் வாய்ந்த வீரரான முகமத் ஷமி நிச்சியமாக இந்திய அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.”

ரவி சாஸ்திரி சொன்னது போல பும்ரா, ஹர்ஷல் பட்டேல் போன்ற வீரர்கள் அணியில் இல்லாத நேரத்தில் முகமத் ஷமி இடம்பெற்றிருந்தால் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்திருக்குமா ? இல்லையா ? இந்திய அணியின் மோசமான நிலைமைக்கு என்ன காரணமாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img