உண்மையாவே அருமையான பந்து வீச்சாளர் ; சிஎஸ்கே அணிக்கு நல்ல ஒரு பந்து வீச்சாளர் ; ரவி சாஸ்திரி பாராட்டிய வீரர் யார் தெரியுமா?
இரு தினங்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் 2021 போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மகேந்திர சிங் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 106 ரன்களை எடுத்துள்ளார். அதில் கே.எல்.ராகுல் 5 ரன்கள், கிறிஸ் கெயில் 10 ரன்கள், தீபக் ஹூடா 10 ரன்கள், ஷாருக் கான் 47 ரன்கள், ரிச்சர்ட்சன் 15 ரன்கள் எடுத்துள்ளனர்.
பின்பு 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15.4 ஓவரில் 107 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியசத்தில் பஞ்சாப் கின்ஸ் அணியை வென்றுள்ளது. அதில் அதிகபட்சமாக டுப்ளஸிஸ் 36 ரன்கள், ருதுராஜ் 5 ரன்கள்,மொயின் அலி 46 ரன்கள் எடுத்துள்ளார்.
முதல் போட்டியில் தீபக் சாகர் 4 ஓவர் பந்து வீசி 36 ரன்களை கொடுத்துள்ளார். ஆனால் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. சிஎஸ்கே அணியின் முக்கியமான பவுலர்களுள் ஒருவர் தான் தீபக் சாகர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அசத்தியுள்ளார் தீபக் சாகர்.
4 ஓவர் பந்து வீசிய தீபக் சாகர் வெறும் 13 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார், அதுமட்டுமின்றி 4 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதனால் சிஎஸ்கே அணிக்கு நல்ல சாதகமாக அமைந்துள்ளது. இதனை பற்றி பேசிய முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி அவரது கருத்தை கூறியுள்ளார்.
மிகவும் ஆச்சரியமாக தன இருக்கிறது முதல் போட்டிக்கும் இரண்டாவது போட்டிக்கும் அப்படியே மாற்றாக உள்ளது. முதல் போட்டியில் ஒரு விக்கெட்டையும் எடுக்காத தீபக் சாகர் இரண்டாவது போட்டியில் முக்கியமான 4 விக்கெட்டை முதல் 8 ஓவரில் கைப்பற்றியுள்ளார்.
இதுமிகவும் அருமையான ஒரு மாற்றும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் அணியின் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.