Advertisement
HomeTrending Newsபும்ரா என்ன இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார் ?? அவருக்கு என்ன ஆச்சு ; சுனில் கவாஸ்கர்...

பும்ரா என்ன இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார் ?? அவருக்கு என்ன ஆச்சு ; சுனில் கவாஸ்கர் அதிரடி பேட்டி ;

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. அதனால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அதனை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்…! இருந்தாலும் இந்திய ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

ஏனென்றால் இப்பொழுது புள்ளிபட்டியலில் 5வது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியால் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியுமா என்று கேட்டால் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் முதல் இரண்டு அணிகள் மட்டுமே அரை இறுதிக்கு தகுதி பெரும்.

அப்படி பார்த்தால் பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு விளையாடி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியால் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதுதான் வேதனையாக உள்ளது.

எந்த போட்டிகள் நடைபெற்றாலும் அவரவர் கருத்துக்களை பாகின்ற்து வருவது வழக்கமாக கொண்டுள்ளனர் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள். இதற்கிடையில் பும்ரா அவரது மன வருத்தத்தை பகிர்ந்துள்ளார் : அதனை படிக்க : எங்களை பார்த்தால் எப்படி இருக்கு ? மனவருத்தத்துடன் பேட்டி அளித்த ; பும்ரா

அதேபோல இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் அளித்த பேட்டியில் ; பும்ரா பேசியது தவறாக இருப்பதாக கூறியுள்ளார். அதனை பற்றி பேசிய கவாஸ்கர் ; நீங்கள் இந்திய அணிக்காக விளையாடி கொண்டு இருக்கீங்க. அதில் வரும் பின்விளைவுகளை எதிர்கொண்டு தன ஆக வேண்டும்.

அதுமட்டுமின்றி, நம் இந்திய அணிக்காக விளையாடுவது என்பது மிகப்பெரிய பெருமை. ஏனென்றால் பல கோடி மக்கள் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று நினைத்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது. இந்திய அணியில் சலுகைகளை பெற்று கொண்டு வருவது நீங்கள் தான்.

அதனால் எந்த நேரத்திலும் நீங்கள் விளையாட வேண்டும். அதுதான் கிரிக்கெட் ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது. ஒரு விளையாட்டு என்று வந்துவிட்டால் தோல்வியும் இருக்கும் வெற்றியும் இருக்கும், ஆனால் இந்திய அணி ஒரு சாம்பியன் அணி.

ஆனால் பல நாடுகள் விளையாடும் போட்டிகளில் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு தான் ஏற்பட்டு கொண்டு வருகிறது. அதனை சரி செய்தலே போதும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்…!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular