இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளனர்.


அதனை அடுத்து இன்று முதல் டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.
இந்திய அணியின் மோசமான தோல்வி :
மற்ற அணிகளுக்கு இடையேயான தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியால் ஏன் ? ஐசிசி தொடரில் மட்டும் மோசமான நிலையில் விளையாடி வருகிறது. அதற்கு என்ன காரணமாக இருக்கும்? என்று கேள்விகள் எழுந்து வருகிறது.


சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டியிலும், ஆசிய கோப்பை 2022யிலும் இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ் கூறுகையில் : “உலகக்கோப்பை போட்டியில் வெல்ல வேண்டுமென்றால் பயிற்சியாளர், அணியின் தேர்வாளர்கள், அணியின் நிர்வாகம் போன்ற மூன்று சேர்ந்து கடினமான முடிவுகளை கையில் எடுக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு தனிப்பட்ட முறையில் தேர்வு செய்தால் தோல்வி தான்.”


“ஒருவேளை விராட்கோலி, ரோஹித் சர்மா மற்றும் இன்னும் 2 வீரர்கள் தான் இந்திய அணிக்காக உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருப்பார்கள் என்று நினைத்தால் நிச்சயமாக அது நடக்க போவதே கிடையாது. தனிப்பட்ட வீரர்கள் மேல் நம்பிக்கை வைப்பதை விட வீரர்களை நம்ப வேண்டும்.”
“எப்பொழுதும் இந்திய கிரிக்கெட் அணியில் இரு வீரர்கள் போட்டியை எப்படி வேண்டுமானாலும் மாற்ற கூடிய திறமை வைத்திருக்கின்றனர். அதேபோல குறைந்தது 5 அல்லது 6 வீரர்கள் அணியில் இருந்தால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். எப்பொழுதும் விராட்கோலி, ரோஹித் சர்மாவை நம்பி கொண்டே இருக்க முடியாது. இளம் வீரர்கள் தான் பொறுப்பை கையில் எடுத்து கொண்டு விளையாட வேண்டுமென்று கூறியுள்ளார் கபில் தேவ்.”
ஐசிசி தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும் என்று நீங்க நினைக்குறிங்க ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!