ஆசிய கோப்பையில் இவருக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் வாய்ப்பு கொடுத்தால் சிரமம் தான் ; அதற்கு காரணம் இதுதான் ; பாகிஸ்தான் முன்னாள் வீரர் உறுதி ;

0

வருகின்ற 18ஆம் தேதி முதல் ஜிம்பாபே அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட போகின்றனர். அதற்கான இந்திய அணியை சமீபத்தில் தான் பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார்.

ஜிம்பாபே தொடரில் இடம்பெற்ற இந்திய வீரர்கள் :

கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் த்ரிப்தி, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்டுல் தாகூர், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், அவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, முகமத் சிராஜ் மற்றும் தீபக் சஹார் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஜிம்பாபே தொடருக்கு பிறகு ஆசிய கோப்பை 2022 போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் மொத்தம் 6 அணிகளை கொண்டு வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆசிய கோப்பை இலங்கையில் நடக்கும் பொருளாதார பிரச்சனை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் தான் அதற்கான அணியை அறிவித்தது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா( கேப்டன் ), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங், அவ்ஸ் கான் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Indian Team

மீண்டும் இந்திய அணியில் வருகை :

தொடக்க வீரரான கே.எல்.ராகுல் சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனால் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. அதுமட்டுமின்றி, உலகக்கோப்பை போட்டிக்கும் சந்தேகம் தான் என்ற செய்தி வெளியானது. ஆனால், காயம் சரியான பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர்.

ஆனால் கொரோனா தொற்று உறுதியான காரணத்தால் அவரால் சரியாக போட்டியில் கவனம் செலுத்த முடியவில்லை. வருகின்ற 18ஆம் தேதி முதல் ஜிம்பாபே அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது இந்திய. அதில் கே.எல்.ராகுல் விளையாட மாட்டார் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவரது பிட்னெஸ் சரியாக இருந்த காரணத்தால் ஜிம்பாபே அணிக்கு தொடரில் இந்திய அணியின் கேப்டனாக விளையாட போகிறார்.

இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா கூறுகையில் ; ” இந்திய அணியின் பேட்டிங் லைனில் கே.எல்.ராகுல் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய முடிவும். அதுமட்டுமின்றி சிறந்த விக்கெட் கீப்பரும் கூட. ஆனால் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் அவரால் விளையாட முடியாமல் போனது. என்னை பொறுத்த வரை நான் கே.எல்.ராகுலை Stand By ப்ளேயாராக தான் முடிவு செய்து வைத்துள்ளேன். ஏனென்றால் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆசிய கோப்பை போன்ற முக்கியமான போட்டிகளில் விளையாட வைப்பது கடினம் தான். அதுமட்டுமின்றி டி-20 உலகக்கோப்பையும் நடைபெற உள்ளது. அவருக்கு சில நேரங்கள் தேவைப்படுகின்றது என்று கூறியுள்ளார் டேனிஷ் கனேரியா.”

தொடர்ச்சியாக விளையாடி வரும் விராட்கோலியின் form மோசமான நிலையில் இருக்கும் போது கே.எல்.ராகுல் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கினால் இந்திய அணிக்கு நல்லதாக இருக்குமா ? இல்லையா ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here