இவரிடம் ஒழுக்கம்,உணர்ச்சிகள் மற்றும் கடினமான உழைப்பை ஆகிய மூன்றும் உள்ளது ; அதில் எந்த சதேகமும் இல்லை ; யுஸ்வென்ற சஹால் கூறியுள்ளார்..!

இந்திய அணியின் முக்கியமான சூழல் பந்து வீச்சாளர் பட்டியலில் ஒருவர் தான் யுஸ்வென்ற சஹால். அவரது பங்களிப்பு இந்திய அணியின் மிகவும் உதவியாக இருந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேபோல யுஸ்வென்ற சஹால் மற்றும் விராட்கோலிக்கு இடையே நல்ல ஒரு நட்பு உள்ளது என்பது எல்லாருக்கும் தெறியும் அதை யாராலும் மறுக்க முடியாது.

இந்திய அணியில் மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் விராட்கோலி மற்றும் யுஸ்வென்ற சஹால் ஆகிய இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வருகின்றனர். சமீபத்தில் ஒரு கிரிக்கெட் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் விராட்கோலி பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் விராட்கோலி பற்றி ” ஒழுக்கம் உள்ளவர், உணர்ச்சி உள்ளவர் மற்றும் கடினமாக உழைப்பவர் என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியை பற்றி யுஸ்வென்ற சஹால் கூறியுள்ளார்.

இப்பொழுதெல்லாம், யுஸ்வென்ற சஹால் -க்கு இந்திய அணியில் இடம்கிடைப்பதே இல்லை. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அதுமட்டுமின்றி தோனிக்கு பிறகு யுஸ்வென்ற சஹால் மற்றும் குல்தீப் யாதவ் போன்ற சூழல் பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே மிகவும் கடினமாக உள்ளது.

அதுமட்டுமின்றி, வருகின்ற ஜூன் 18ஆம் தேதி அன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இதில் சூழல் பந்து வீச்சாளரான யுஸ்வென்ற சஹால் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இலங்கைக்கு எதிரான போட்டியில் இடம்பெற வாய்ப்புள்ளதா இல்லையா என்று தெரியவில்லை.