ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இவரை அணியில் இருந்து வெளியேற்றுங்கள் ; இந்திய அணியின் முன்னாள் வீரர் பேட்டி ; முழு விவரம் இதோ ;

சமீபத்தில் தான் நவம்பர் 25ஆம் தேதி அன்று நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடியது இந்திய அணி. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 111.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 345 ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸ் விளையாட களமிறங்கிய நியூஸிலாந்து அணி 142.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்களை மட்டுமே கைப்பற்றியது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் – ல் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னின்ஸ் போல இல்லாமல் சற்று பின்னடைவு ஏற்பட்டது. 81 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 234 ரன்களை அடித்தனர்.

பின்னர் நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் போட்டியில் 9 விக்கெட்டை இழந்து இறுதிவரை விளையாடியது. ஆனால் இந்திய அணி அந்த ஒரு விக்கெட்டை கைப்பற்ற முடியமால் திணறியது. அதனால் போட்டி ட்ராவில் முடிந்தது. இதில் முன்னனி வீரரான விராட்கோலி விளையாடவில்லை. ஆனால் இரண்டாவது டெஸ்ட் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் விராட்கோலி உள்ளே வந்தால் யார் அணியில் இருந்து வெளியேற போகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுகம் ஆனார். அவர் விளையாடிய முதல் இன்னிங்ஸ் – ல் சதம் அடித்து மாஸ் காட்டினார். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் அளித்த பேட்டியில் ,

நிச்சியமாக இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் 11ல் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற வேண்டும். அதில் சந்தேகமே வேண்டாம். ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ஓப்பனிங் பேட்ஸ்மேனான புஜரா அல்லது ரஹானே அணியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று கூறியுள்ளார். இவர் சொல்வது போல, ஸ்ரேயாஸ் ஐயர் முக்கியமான வீரராக அணியில் இணைந்துள்ளார்.

என்ன செய்ய போகிறார் விராட்கோலி என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். நியூஸிலாந்து அணிகக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற வேண்டுமா இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பண்ணுங்க….!!!