இது நடக்காமல் !! Dhoni “IPL” போட்டியில் இருந்து விலகமாட்டார் ..! அடித்து சொல்லும் மைக்கேல் வாகன்..! உண்மை தானோ ?

கிரிக்கெட் ; கடந்த ஆண்டு கொரோனா காரணமாக யாரும் வெளியே போகமுடியமால் இருந்தனர். அந்த நேரத்தில் சரியாக ஆகஸ்ட் மாதத்தில் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவலை பகிர்ந்தார்.

அதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார். ஆனால் அவர் இன்னும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதுவும் கேப்டனாக. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் அதாவது ஐபிஎல் போட்டி அறிமுகம் ஆன முதல் ஆண்டு முதல் இப்பொழுது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரே கேப்டன் என்றால் அது தோனி மட்டும் தான்.

சமீபத்தில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் அளித்த பேட்டியில் ; தோனி இன்னும் இரு ஆண்டுகள் நிச்சியமாக ஐபிஎல் போட்டிகளில் விளையடுவார் என்று அவர் கூறியுள்ளார். அதனால் தோனி இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை பார்க்க முடியும். இதனை பற்றி பேசிய முன்னாள் இங்கிலாந்து அணியின் வீரரான மைக்கேல் வாகன் ;

கண்டிப்பாக எம்.எஸ். தோனி மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல், அவர் ஓய்வை அறிவிக்க மாட்டார். அதிக மக்களை இருக்கும் போது ” Good Bye” சொல்லும் தகுதி உள்ள ஒரே ஆள் தோனி மட்டும் தான். சர்வதேச போட்டியில் இருந்து தோனி விலகியது யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் மைதானத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும்போது தான் அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும் , அதனை நான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் மைக்கேல் வாகன்.

வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்கு உலகக்கோப்பை போட்டிக்கான இந்தியா அணியை அறிவித்தது பிசிசிஐ, அதில் மகேந்திர சிங் தோனி ஆலோசகராக நியமனம் செய்துள்ளது பிசிசிஐ. விராட்கோலி தலைமையில் தோனியின் ஆலோசனையில் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்குமா இல்லையா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.