சுரேஷ் ரெய்னா களமிறங்க போகும் ஐபிஎல் அணி இதுதான் ; ரெய்னா சொன்ன அந்த ஒரு வார்த்தை ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2021 போட்டிகள் முடிந்த சில நாட்களில் ஐபிஎல் 2022 போட்டிக்கான பேச்சுகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் 2022யில் புதிதாக இரு அணிகள் அறிமுகம் ஆக போவதாக பிசிசிஐ கூறியுள்ளது. சமீபத்தில் தான் அஹமதாபாத் மற்றும் லக்னோ போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022 ஏலம் மிகப்பெரிய அளவில் உள்ளது. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் தலா 4 வீர்ரகளை மட்டும் தான் அதிகபட்சமாக தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.சமீபத்தில் தான் அனைத்து அணிகளும் அவரவர் தக்கவைத்து வீர்ரகள் பட்டியலை வெளியிட்டனர்.

அதில் தான் அதிர்ச்சியே..! ஐபிஎல் போட்டிகளில் மிகப்பெரிய அணி மற்றும் அதிக ரசிகர்ளை கொண்ட அணியென்றால் அது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். இதுவரை 14 சீசன் ஐபிஎல் போட்டிகளில் 4 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றாலே தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா தான் நியாபகத்திற்கு வரும். ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் அவர் (சுரேஷ் ரெய்னா) சொல்லும் அளவுக்கு ஒன்னும் விளையாடவில்லை. அதனால் ராபின் உத்தப்பா அணியில் இடம்பெற்றார்.

முதலில் இரு போட்டிகளில் சொதப்பல் ஆட்டத்தை விளையாடினாலும், பின்னர் போக போக அதிரடியாக விளையாடி ரன்களை அடித்து சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல உத்தப்பாவும் ஒரு காரணமாக தான் இருக்கிறார். அதுமட்டுமின்றி, சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் மகேந்திர சிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது.

சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்படாதது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர் எந்த அணியில் விளையாடுவார் என்று பல கேள்விகள் எழுகின்றனர். ஆனால் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் 2021 இரண்டாம் பாகம் நடைபெறுவதற்கு முன்பு அவர் கொடுத்த பேட்டியில்;

எனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் மிகவும் பிடித்த அணி, அதன்பிறகு எனக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இணைந்து விளையாட ஆசையாக இருக்கிறது என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா. அதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, அவரை ஏலத்தில் கைப்பற்றுமா ?? இல்லை சிஎஸ்கே அணியே அவரை கைப்பற்றிவிடுமா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.