இந்த ஆண்டு உலகக்கோப்பை இந்தியாவிற்கு தான் ; உறுதியாக சொல்லும் வரலாறு ; குஷியில் இந்திய ரசிகர்கள் ;

ஐசிசி உலகக்கோப்பை 2022: இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலககோப்பை போட்டிகள் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை 31 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்னும் 10 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது அரையிறுதி சுற்றுக்கு.

புள்ளிபட்டியலில் விவரம் :

குரூப் 1 பிரிவில் நியூஸிலாந்து அணி முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அதேபோல குரூப் 2 பிரிவில் தென்னாபிரிக்கா அணி முதல் இடத்திலும், இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இடத்திலும், பங்களாதேஷ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அதிகபட்சமாக இந்த ஆறு அணிகளில் ஏதாவது நான்கு அணிகள் தான் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதனால் இனிவரும் போட்டிகளில் அனைத்து அணிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று தான். ஆனால் இந்த முறையாவது இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுமா ?

இந்திய அணியின் வீக்னஸ் :

கடந்த சில ஆண்டுகளாக உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் மட்டும் இந்திய அணியின் விளையாட்டு மிகவும் மோசமான நிலையில் தான் இருந்தது. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு இறுதி நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியிலும், இந்த ஆண்டு சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியிலும் இந்திய அணியின் விளையாட்டு மோசமான நிலையில் இருந்த காரணத்தால் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் போய்விட்டது.

அதேநிலைமை தான் இந்த ஆண்டும் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் மோசமான நிலையில் விளையாடி வருகின்றனர்.அதிலம் குறிப்பாக டாப் ஆர்டர் பேட்டிங் தான் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் வரலாறு :

ஆமாம், மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து இறுதியில் போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியது இந்திய. அப்பொழுது நடைபெற்ற நிகழ்வும் இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் நடக்கும் விஷயமும் ஒரே மாதிரியாக இருக்கிறது.

2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் நடைபெற்ற நிகழ்வுகள்:

  1. பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை வென்றதுள்ளது இந்திய.
  2. பின்பு, உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை வென்றது அயர்லாந்து அணி.
  3. தென்னாபிரிக்கா அணி 2 பந்து மீதமுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை வென்றனர்.
  4. அதேபோல, இறுதியாக இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை வென்றுள்ளனர்.

2022 ஐசிசி டி-20 போட்டியில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் :

  1. இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை வென்றது இந்திய.
  2. உலகக்கோப்பை லீக் சுற்றில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி வென்றது.
  3. இறுதி தினங்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில், தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதின. அதில் 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணியை வென்றது தென்னாபிரிக்கா.
  4. அப்போ..! இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் படத்தை வெல்லுமா ? இந்திய.