ராகுல் டிராவிட் கிட்ட இதை தான் எதிர்பார்க்கிறேன் ; இந்திய அணியின் கேப்டனான விராட்கோலி ஓபன் டாக் ; முழு விவரம் இதோ ;

ரவி சாஸ்திரிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட். உலகக்கோப்பை போட்டிகள் நடந்த பிறகு நியூஸிலாந்து அணிக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது.

அதில் மூன்று டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது. பின்னர் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ட்ராவில் முடிந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி முதல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் இந்திய அணியின் கேப்டனான விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் பற்றி கூறுகையில் ; இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளது என்று தான் சொல்லியே ஆக வேண்டும். அதுமட்டுமின்றி, இதற்கு முன்னாள் ரவி சாஸ்திரி தலைமையில் எப்படி போட்டிகளில் விளையாடினோமோ, அதே போல தான் விளையாடி வருகிறோம்.

அதுமட்டுமின்றி எங்கள் ஒரே நோக்கம் இந்திய அணியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரே காரணம் தான். இந்திய அணியின் வளர்ச்சியை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் ஒரே எண்ணம். ராகுல் டிராவிட் பயிற்சியாளராடன் இருப்பது மிகவும் சிறப்பான ஒன்றாக தான் இருக்கிறது. நானும் அவரும் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளோம்.

அவருடைய அனுபவங்கள் நிச்சியமாக இந்திய அணியை முன்னோக்கி செல்ல அதிக அளவில் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் விராட்கோலி. அதுமட்டுமின்றி உலகக்கோப்பை போட்டி சமீபத்தில் முடிந்த பிறகு அவர் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட்கோலி க்கு பிறகு இப்பொழுது ரோஹித் சர்மா மிகவும் சிறப்பாக இந்திய அணியின் டி20 கேப்டனாக செயல் படுவார் என்று எதிர்பார்க்க படுகிறது. ஏனென்றால் ரோஹித் சாரம் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இதுவரை அதிகபட்சமாக ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விராட்கோலி மற்றும் ராகுல் டிராவிட் காம்போ எப்படி இருக்கும் ?? ரவி சாஸ்திரி மற்றும் விராட்கோலி இருவருக்கு இருக்கும் ஒரு ஒற்றுமை ராகுல் ட்ராவிடம் இருக்குமா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பண்ணுங்க…!