வீடியோ : தோனியை மிஞ்சிய ரிஷாப் பண்ட் ; பா..! என்ன கேட்ச் இது ; வேற லெவல் ;

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் முதல் ஒரு போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் அமையவே இல்லை. ஆமாம், பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்தது வந்தது இங்கிலாந்து அணி. முதல் ஐந்து விக்கெட்டை விரைவாக இழந்த நிலையில் மோசமான போட்டியாக இங்கிலாந்து அணிக்கு மாறியது.

இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணியால் 25.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 110 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 30, மொயின் அலி 14, டேவிட் வில்லே 21 ரன்களை அடித்தனர். ஒருநாள் போட்டிக்கு இந்த ரன்கள் மிகவும் குறைவான ரன்கள் தான்.

அதனால் 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு இலக்கை எட்ட மிகவும் எளிமையாக மாறியது. இப்பொழுது இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் ஆட்டம் இழக்காமல் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் பிடித்த கேட்ச் வைரலாக பரவி வருகிறது. போட்டி தொடங்கிய மூன்றாவது ஓவர் முகமத் ஷமி பவுலிங் செய்தார், அதனை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், பந்தை அடிக்க முயற்சி செய்தபோது பந்து ஸ்விங் ஆகி பேட் எட்ஜ்-ல் பட்டு விக்கெட் கீப்பர் பக்கம் சென்றது.

அதனை துல்லியமாக ரிஷாப் பண்ட் தாவிப்பிடித்தார். அதன் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. வீடியோ :

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் முகமத் ஷமி ஆகிய இருவரும் இங்கிலாந்து அணியை அலறவிட்டனர். ஏனென்றால் பும்ரா 7.2 ஓவர் பவுலிங் செய்து 6 விக்கெட்டை கைப்பற்றிய ணியைல் வெறும் 19 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார்.

அதேபோல, ஷமி 7 ஓவர் பவுலிங் செய்து 31 ரன்களை கொடுத்த நிலையில் 3 விக்கெட்டை கைப்பற்றினார். இங்கிலாந்து அணியின் 9 விக்கெட்டைகளை இந்த இருவருமே கைப்பற்றியுள்ளனர். டி-20 தொடரை கைப்பற்றியதை போலவே ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றுமா இந்திய ?