இப்பொழுது தெரிகிறதா இவரது பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்று ; ப்ளேயிங் 11ல் இவருக்கு என்று ஒரு இடத்தை விட்டுவிட வேண்டும் ; ரவி சாஸ்திரி ஓபன் டாக் ;

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டி நேற்று முன்தினம் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளார்.

Ravi sastri

இப்பொழுது சமூகவலைத்தளங்களில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பற்றிய கருத்து தான் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. பல முன்னாள் வீரர்கள் இந்த போட்டியை பற்றி அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளார் உலகச்சிறந்த ஆல் – ரவுண்டர் ஹர்டிக் பாண்டிய என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.”

“மேலும் இதனை பற்றி பேசிய ரவி சாஸ்திரி ; “சக்கரத்தில் இருக்கும் பற்கள் எப்படி முக்கியமோ, அதேபோல தான் ஹர்டிக் பாண்டியாவும் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான வீரர். ஹர்டிக் பாண்டியாவை இந்திய அணியில் இருந்து வெளியேற்றினால் இந்திய அணியில் பல குழப்பங்கள் ஏற்படும்.”

“பின்பு பேட்ஸ்மேன் ஆ? பவுலர் ஆ? யாரை தேர்வு செய்வது என்று பல குழப்பங்கள் ஏற்படும். கடந்த ஆண்டு உலகக்கோப்பை டி-20 2021 போட்டிகளில் அவரது போர்மை அனைவரும் மிஸ் பண்ணினோம். அவரால் (ஹர்டிக் பாண்டிய) பவுலிங் செய்ய முடியாமல் போனது. அதனால் தான் இந்திய அணியில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.”

“அவரது திறமைக்கு ஏற்ப வீரர் இன்னும் இதுவரை இந்திய அணியில் இடம்பெறவில்லை. இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக ஹர்டிக் பாண்டியாவின் பங்களிப்பு இந்திய அணிக்கு தேவைப்படுகிறது. அதனால் அவரை நன்கு கவனிக்க வேண்டுமென்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.”

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்டிக் பாண்டிய பவுலிங் செய்து மூன்று விக்கெட்டையும், பேட்டிங்-கில் 33 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி சரியாக 19.4 ஓவரில் சிக்ஸர் அடித்து பாகிஸ்தான் அணியை வெல்ல காரணமாக இருந்துள்ளார் ஹர்டிக் பாண்டிய.

இனிவரும் போட்டிகளில் மட்டுமின்றி உலகக்கோப்பை போட்டிகளிலும் ஹர்டிக் பாண்டியாவின் பங்களிப்பு நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு தேவைப்படுகிறது. ஹர்டிக் பாண்டிய சரியாக விளையாடாமல் போனால் கடந்த ஆண்டு டி-20 2021 உலகக்கோப்பை போட்டியில் நடந்தது தான் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.