10 ஓவரில் 10 விக்கெட் ..! அட்டகாசமாக பவுலிங் செய்த பாகிஸ்தான் அணி ; இந்திய அணியுடன் மீண்டும் மோத போகும் பாகிஸ்தான் அணி ; முழு விவரம் இதோ ;

ஆசிய கோப்பைக்கான போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இனிவரும் போட்டிகள் நிச்சியமாக விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

நேற்று நடந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், நிசாகட் கான் தலைமையிலான ஹாங் காங் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ஹாங் காங் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை.

வழக்கம்போல பாபர் அசாம் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தார். இருப்பினும் பாகிஸ்தான் வீரரான ரிஸ்வான், பாகர் ஜமான் மற்றும் குஷ்தில் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 193 ரன்களை அடித்தனர்.

பின்பு 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஹாங் காங் அணி. ஆனால் இந்த அளவிற்கு மோசமான பேட்டிங் இருக்கும் என்று சத்தியமாக யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்திய அணியை எதிர்த்து 150 ரன்களை அடித்த ஹாங் காங், நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 38 ரன்களை அடித்த நிலையில் ஆல் – அவுட் ஆகியுள்ளனர்.

ஹாங் காங் வீரர்களில் ஒருவர் கூட 10 ரன்களை தாண்டவில்லை. அதனால் 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. அதனால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்று இரவு முதல் சூப்பர் 4 லீக் சுற்றுகள் நடைபெற உள்ளது. அதனால் நிச்சியமாக போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எந்த அணிக்கு யார் யாருடன் போட்டிகள் நடைபெற உள்ளது ?

இந்திய :

செப்டம்பர் 4ஆம் தேதி – இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதல்

செப்டம்பர் 6ஆம் தேதி – இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதல்

செப்டம்பர் 8ஆம் தேதி – இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்.

பாகிஸ்தான் :

செப்டம்பர் 4ஆம் தேதி – பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதல்

செப்டம்பர் 7ஆம் தேதி – பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

செப்டம்பர் 9ஆம் தேதி – பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதல்

இலங்கை :

செப்டம்பர் 3ஆம் தேதி – இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

செப்டம்பர் 6ஆம் தேதி – இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதல்

செப்டம்பர் 9ஆம் தேதி – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதல்

ஆப்கானிஸ்தான் :

செப்டம்பர் 3ஆம் தேதி – ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதல்

செப்டம்பர் 7ஆம் தேதி – ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதல்

செப்டம்பர் 8ஆம் தேதி – ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதல்

இதில் நான்கு அணிகளுக்குள் நடக்க போகும் போட்டிகளில் அதிக போட்டிகளில் வென்று முதல் இரு இடத்தில் இருக்கும் அணிகளுக்கு தான் இறுதி போட்டி நடைபெறும். பின்பு அதில் வெற்றிபெறும் அணிதான் இந்த ஆண்டு ஆசிய கோப்பையை கைப்பற்ற போகின்றனர்.