காயம் காரணமாக இந்திய அணியில் வெளியேறிய ப்ளேயிங் 11 வீரர் ; அப்போ அடுத்த போட்டியில் வெற்றி சந்தேகம் தான ?

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஆசிய கோப்பை 2022 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக ஐந்து போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது 6வது போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஹாங் காங் அணியும், பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகின்றனர். இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 193 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது ஹாங் காங்.

இந்த முறை இந்திய அணியின் விளையாட்டு சிறப்பாக மாறியுள்ளது தான் உண்மை. எப்பொழுது தொடர் போட்டிகளிலும் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகும் இந்திய, சமீப காலமாக முக்கியமான போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி வெற்றிகளை கைப்பற்றி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஆசிய கோப்பை 2022ல் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தீரில் வெற்றியை கைப்பற்றியது இந்திய. அதனை அடுத்து ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.

இப்பொழுது சூப்பர் 4 சுற்றுக்காக இந்திய கிரிக்கெட் அணி காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இப்பொழுது தீடிரென்று இந்திய அணியின் ஆல் -ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் ஆசிய கோப்பை 2022 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அந்த இடத்திற்கு அக்சர் பட்டேல் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ உறுதியாக கூறியுள்ளது.

இது நிச்சியமாக இந்திய அணிக்கு வருத்தமான செய்தி தான். ஏனென்றால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் அதிரடியான ஆட்டமும் தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம். அப்படிபட்ட ஒரு ஆல் – ரவுண்டர் இல்லாமல் இனிவரும் போட்டிகளில் சமாளிக்குமா இந்திய ? ப்ளேயிங் 11ல் குழப்பம் ஏற்படுமா ? இல்லையா ?