இவர் சரியாக விளையாடிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய இரண்டாவது டி-20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பவுலிங்கை தேர்வு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு அதிரடியான தொடக்க ஆட்டம் அமைந்தது. பதும் நிஸ்ஸங்க மற்றும் மெண்டிஸ் ஆகிய இருவரின் பார்ட்னெர்ஷிப் ஆட்டம் இலங்கை அணிக்கு ரன்கள் குவிந்தன. பின்னர் ஒருவர் பின் ஒருவராக ரன்களை அடித்து தொம்சம் செய்தனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 206 ரன்களை அடித்தனர். அதில் நிசங்க 33, மெண்டிஸ் 52, அசலாங்க 37, ஷனாக 56 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது.

இலங்கை அணியை காட்டிலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு மோசமான தொடக்க ஆட்டம் அமைந்தது. இஷான் கிஷான், சுப்மன் கில், ராகுல் த்ரிப்தி போன்ற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்து கொண்டே சென்றனர். ஆனால் நம்பிக்கை நாயகனான சூரியகுமார் யாதவின் அதிரடியான ஆட்டம் இந்திய அணிக்கு ஆறுதலாக அமைந்தது. பின்பு ஆல் – ரவுண்டர் அக்சர் பட்டேல் வெறித்தமான ரன்களை அடித்ததால் இலங்கை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

ஆனால் இறுதி ஓவர் வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 8 விக்கெட்டை இழந்த நிலையில் 190 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இலங்கை. இப்பொழுது 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு தோல்வியை படி பேசிய இந்திய அணியின் கேப்டனான ஹர்டிக் பாண்டிய கூறுகையில் : “உண்மையிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் இந்த இரு விஷயங்களும் பவர் ப்ளேவில் என்னை ரொம்ப பாதிப்படைய வைத்தது. சின்ன சின்ன தவறுகள் நாங்கள் இன்றைய போட்டியில் செய்தோம். அதில் இருந்து எப்படி கற்றுக்கொள்ள வேண்டுமென்பது மட்டும் தான் எங்கள் கையில் இருக்கிறது. போட்டியில் மோசமான நாட்கள் என்பது நிச்சியமாக இருக்கும். “

“ஆனால் அதற்காக அடிப்படையான விஷயத்தில் இருந்து வெளியே போக முடியாது. நான்காவதாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார். யாராக இருந்தாலும் அணியில் தேர்வாகிய நிலையில் யார் எந்த இடத்தில் விளையாட விரும்புகிறார்களோ, அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும் (ராகுல் திரிபதி) என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டியா.”

இரண்டாவது டி-20 போட்டிக்கான தொடரில் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு என்ன காரணம் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!