வீடியோ : நீ ஏன் இப்படி பவுலிங் பண்ற ? கடுப்பான ஹர்டிக் பாண்டிய ; போட்டியின் திருப்புமுனையே இதுதான் ;

இந்திய மற்றும் இலங்கை டி-20 போட்டிக்கான தொடர் :

நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா மைதானத்தில் நேற்று இரவு நடந்த இரண்டாவது டி-20 போட்டிக்கான போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் , ஷனாக தலைமையிலான இலங்கை அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டிய பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களான நிசங்க, மெண்டிஸ், ஷனாக மற்றும் அசலாங்க போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 206 ரன்களை விளாசினார்கள். பின்பு 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல் தொடக்க ஆட்டம் மோசமான நிலையில் தான் ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக, இஷான் கிஷான், சுப்மன் கில், ராகுல் திரிபதி போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இறுதி ஓவர் வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணியால் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 190 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 51, ஹர்டிக் பாண்டிய 12, அக்சர் பட்டேல் 65, ஷிவம் மாவி 26 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி 1 – 1 என்று சம நிலையில் இருக்கின்றனர்.

போட்டியின் திருப்புமுனை :

இளம் வீரரான அர்ஷதீப் சிங் கடந்த ஆண்டு 2022ல் நடைபெற்று முடிந்த ஆசிய டி-20 மற்றும் டி-20 உலககோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்துள்ளார்.பும்ராவிற்கு பிறகு இவர் தான் இந்திய அணியின் எதிர்காலம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கை வைத்தனர். ஆனால் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் மோசமாக பவுலிங் செய்துள்ளார் அர்ஷதீப் சிங்.

ரன்களை கொடுத்தது மட்டுமின்றி அதிகபட்சமாக 5 நோ-பால் வீசியுள்ளார். மொத்தம் 2 ஓவர் மட்டுமே பவுலிங் செய்த அர்ஷதீப் சிங் 37 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. அதுமட்டுமின்றி, 2 ஓவரில் 5 நோ-பால் வீசியது தான் போட்டியின் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்திய அணியின் கேப்டனாக ஹர்டிக் பாண்டிய கடுப்பாகும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.