டெஸ்ட் போட்டிக்கான தொடரில் வெற்றியை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிக்கான தொடரில் நம்பிக்கையுடன் விளையாடி வருகின்றனர்.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் மிச்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு ரன்கள் குவிந்தது. சரியான நேரத்தில் மிச்சேல் விக்கெட்டை கைப்பற்றினார் ரவீந்திர ஜடேஜா. அதனால் இந்திய அணிக்கு சாதகமாக மாறியது.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஆஸ்திரேலியா வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து கொண்டே வந்த காரணத்தால் 35.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்தனர்.
வெறும் 188 ரன்களை மட்டுமே அடித்துள்ளது ஆஸ்திரேலியா அணி. இதனை தொடர்ந்து 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது இந்திய.
பீல்டிங் என்றால் ரவீந்திர ஜடேஜா பெயர் தான் ரசிகர்கள் மனதில் நியாபகர்த்திற்கு வரும். அதேபோல முதல் ஒருநாள் போட்டியில் ரவீந்திர ஜடேஜா பிடித்த கேட்ச் இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.
ஆமாம், 22.4 ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தை எதிர்கொண்டார் ஆஸ்திரேலியா வீரர் மரன்ஸ். அப்பொழுது பவுண்டரி அடிக்க முயன்ற போது ரவீந்திர ஜடேஜா அருகில் பந்து சென்றது. அதனை துல்லியமாக பறந்து கேட்ச் பிடித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் வாயடைத்து போய் நின்றனர்.
காயம் காரணமாக சில மாதங்கள் அணியில் விளையாட நிலையில் இருந்தார் ரவீந்திர ஜடேஜா. பின்பு போர்ம் -க்கு திரும்ப வர உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார் ரவீந்திர ஜடேஜா. அதன்பின்பு தான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர்களில் விளையாட இடம்கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
— vignesh viki (@vignesh04085597) March 17, 2023