வெறும் 3 ரன்களில் அவுட் ; இவர் தொடக்க வீரரா ? இவரை எதற்கு அணியில் எடுத்தீங்க ? கடுப்பான ரசிகர்கள் ;

0

இந்திய மாற்றம் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய அளவில் தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் மிச்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. பின்பு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமத் ஷமி மற்றும் முகமத் சிராஜ் அசத்தலாக பவுலிங் செய்து விக்கெட்டை கைப்பற்றினர்.

அதனால் 35.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலியா அணி வெறும் 188 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது இந்திய.

அதில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 81, ஸ்டீவன் ஸ்மித் 22, ஜோஷ் இங்கிலீஸ் 26 ரன்களை அடித்துள்ளனர். பேட்டிங் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணியின் 5 ஓவர் முடிவில் 16 ரன்களை அடித்த நிலையில் 3 விக்கெட்டை இழந்துள்ளனர்.

சொதப்பலான தொடக்க ஆட்டம் :

இந்திய கிரிக்கெட் அணியில் யார் யார் தொடக்க வீரர்களாக விளையாட வேண்டுமென்று என்பதை இன்னும் இந்திய கிரிக்கெட் அணி முடிவு செய்யவில்லையா ? ஏனென்றால் அவ்வப்போது தொடக்க வீரர்களை மாற்றம் செய்து கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ரிஷாப் பண்ட், சுப்மன் கில், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் தொடக்க வீரர்களாக இந்திய அணியின் விளையாடி உள்ளனர். இந்த தொடரில் ரோஹித் சர்மா இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக இளம் வீரரான இஷான் கிஷான் இடம்பெற்றுள்ளார்.

டி-20 போட்டிகளில் அட்டகாசமாக விளையாடிய வரும் இஷான் கிஷானுக்கு அவ்வப்போது இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் வாய்ப்பை சரியாக பயன்படுத்துகிறாரா ??

வெறும் 3 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்துள்ளார் இஷான் கிஷான். அவருக்கு பதிலாக கடந்த ஆண்டு முழுவதும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களாக யார் விளையாடினால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்து என்ன என்பதை பதிவு செய்யுங்கள்..! ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here