தோனியை பார்க்கும்போது எனக்கு இதுதான் தோன்றுகிறது ; இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் ஜடேஜா….!

இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பான ஐபிஎல் 2021 தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த ஆண்டு போலவே முதல் சில போட்டிகளில் மக்கள் யாரும் மைதானத்தில் அனுமதி இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்றது. அப்பொழுது சிஎஸ்கே அணி எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு பல மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் சென்னை ஆனால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறியது.

இந்த சம்பவத்தால் சிஎஸ்கே அணியின் வீரர்கள் மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் 2021கான தேதி அறிவித்த பின்னர் மார்ச் தொடக்கத்தில் சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர் ; தோனி , அம்பதி ராயுடு, கிருஷ்ணப்ப கவுதம், ஹரி ஷங்கர் ரெட்டி போன்ற வீரர்கள் சென்னையில் பயிற்சியை தொடங்கினார்.

பின்னர் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது. இந்த அப்பூதி வருகின்ற 10ஆம் தேதி மும்பையில் உள்ள மைதானத்தில் நடைபெற போவதால், சில நாட்களுக்கு முன்பே சென்னையில் பயிற்சி தொடங்கிய வீரர்கள் மும்பை சென்று அங்கு பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் மற்றும் சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரரான ரவீந்திர ஜடேஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் தோனியுடன் இருக்கும் புகைப்படம் அது. எனக்கு மிகவும் ஆர்ச்சரியமாக தான் இருக்கிறது.ஏனென்றால் நான் எப்படி அவரை 2009ஆம் ஆண்டு பார்த்தேனோ அதேபோலத்தான் இப்படியும் இருக்கிறார்.

சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர்களுள் ஜடேஜாவும் ஒருவர். ஏனென்றால் இவர் நிறைய போட்டிகளில் இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி இவருடைய சூழல் பந்துவீச்சால் பல முக்கியமான நேரத்தில் முக்கியமான விக்கெட்டையும் எடுத்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவரது கையில் அடிபட்டு விட்டது அதனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் இவரால் விளையாட முடியாமல் போய்விட்டது. சில மாதங்கள் கிரிக்கெட் விளையாடாத ஜடேஜா கடந்த வரும் மும்பையில் உள்ள சென்னை அணியில் இணைந்து 7 நாட்கள் தனிமை படுத்தி கொண்டு, இப்பொழுது பயிற்சியை ஆரம்பித்துள்ளார் ஜடேஜா.