2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியின் போது ஷோயப் அக்தர் என்னிடம் இதை கேட்டார்…! : ஹர்பாஜன் சிங் …!

2011ஆம் செமி பைனல் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர். முதல் பேட்டிங் செய்த இந்திய வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 260 ரன்களை எடுத்தனர். அதில் சேவாக் 38 ரன்கள், சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள், கவுதம் கம்பிர் 27 ரன்கள், விராட் கோலி 9 ரன்கள், யுவராஜ் சிங் 0 ரன்கள், மகேந்திர சிங் தோனி 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள்,இறுதிவரை போராடி 231 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி. அதனால் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களும் , இந்திய மக்கள் அனைவரும் சந்தோஷத்தில் மூழ்கினார்.

2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை முடிந்து இத்துடன் 10 ஆண்டுகள் முடிந்துள்ளது. அதனால் சில வீரர்கள் அவரவர் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர் ஹர்பாஜன் சிங் ; உலக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்தினம் என்னிடம் இறுதி போட்டியை பார்க்க டிக்கெட் வாங்கி தருமாறு கேட்டார்.

ஷோயிப் அக்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு டிக்கெட் வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான் பஞ்சாப் கிரிக்கெட் வாரியத்துக்கு தெடர்பு கொண்டு 4 டிக்கெட் வாங்கி அதனை நான் என் கையில் அவருக்கு கொடுத்தேன், அப்பொழுது அவர் (ஷோயிப் அக்தர்) 4 டிக்கெட் வாங்கி கொடுத்தது மிகவும் பெரிய விசியம் என்று கூறியுள்ளார் அக்தர்.

என்னுடைய வாழ்க்கையில் ஏப்ரல் 2ஆம் தேதி மறக்க முடியாத ஒருநாள் ஏனென்றால் என்னுடைய கனவு அன்று நிறைவேறியது. அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் சூழல் பந்துவீச்சாளர் ஹர்பாஜன் சிங்.

ஹர்பாஜன் சிங் கடந்த இரு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளையாடியுள்ளார். அனால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டிகளில் சில முக்கியமான காரணத்தால் அவரால் சிஎஸ்கே அணியில் விளையாட முடியவில்லை.

அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஏலத்தில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அவர் அணியில் நீக்கியதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவர் கைப்பற்றியுள்ளது. அதனால் ஹர்பாஜன் சிங் உடைய சூழல் பந்துவீச்சை கொல்கத்தா அணியில் காண முடியும்.