தேவ்தத் படிக்கல் இப்படியெல்லாம் பேசுவார் என்று சத்தியமாக நினைத்து கூட பார்க்கவில்லை ; விராட் கோலி ஓபன் டாக் ..!

16வது ஐபிஎல் 2021 போட்டி நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 177 ரன்களை எடுத்துள்ளனர். தொடக்க ஆட்டம் சையாக இல்லை என்றாலும் அதன்பின்னர் பேட்டிங் செய்த வீரர்கள் பவுண்டரிகளை விளாசினார்.

அதில் ஜோஸ் பட்லர் 8 ரன்கள், சாம்சன் 21 ரன்கள், சிவம் துபே 46 ரன்கள், ரியான் பராக் 25 ரன்கள், ராகுல் திவேதிய 40 ரன்கள், கிறிஸ் மோரிஸ் 10 ரன்கள் அடித்துள்ளனர். பின்பு 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய பெங்களூர் அணி, 16.3 ஓவரில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 181 ரன்களை அடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

இப்பொழுது பெங்களூர் அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8வது இடத்திலும் உள்ளது. அதில் தேவ்தத் படிக்கல் சதம் அடித்துள்ளார். விராட் கோலி 72 ரன்களை விலகியுள்ளார். போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில்;

டி-20 போட்டியில் பார்ட்னெர்ஷிப் தான் முக்கியம் அது எங்களுக்கு சிறப்பான முறையில் அமைந்துள்ளது. தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை விளையாடிய போது நான் என்னுடைய விக்கெட்டை இழக்காமல் இருக்க வேண்டும், அது மிகவும் முக்கியமான ஒன்று.

அவ்வாறு விக்கெட் இழந்தால் அணியில் சிறிது தயக்கம் ஏற்படும். அதனை தவிர்க்க நான் கவனமாக பேட்டிங் செய்தேன். அதுமட்டுமின்றி நான் தேவ்தத் படிக்கலிடம் சதம் அடிப்பதை பற்றி பேசும்போது, அவர் என்னிடம் நீங்க ரன்களை அடித்து போட்டியை முடித்து விடுங்கள் என்று தேவ்தத் படிக்கல் என்னிடம் கூறினார்.

அதற்கு நான் , நீ முதலில் சதம் அடி அதன்பிறகு முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னதுக்கு, இது போன்ற சதம் அடிக்கும் தருணம் அதிகம் வரும் அதனால் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று கூறினார் தேவ்தத் படிக்கல், அதனால் எனக்கு மிகவும் ஆர்ச்சரியமாக இருந்தது.

தேவ்தத் படிக்கல் ஆடிய ஆட்டம் மிகவும் அதிரடியான ஒன்று என்பதில் மாற்றமில்லை. எங்களிடம் சிறப்பான பவுலிங் இருக்கிறது. அதனால் நாங்கள் சரியான பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.