வீடியோ ; CSK அணிக்கு உயிர் கொடுத்த சாம் கரண்.. இவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சியமாக தோல்விதான்..!!

இரு தினங்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் 2021 போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான டூபிளெஸ்ஸிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 220 ரன்களை அடித்துள்ளனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 64 ரன்கள், டுப்ளஸிஸ் 95 ரன்கள், மொயின் அலி 25 ரன்கள் மற்றும் டோனி 17 ரன்களை விளாசியுள்ளார்.

பின்பு 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. அதனால் 6 ஓவரில் 5 விக்கெட்டை இழந்தனர். அதனால் இறுதிவரை போராடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

சாம் கரண் மட்டுமில்லை என்றால் நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோல்வி தான். ஏன் தெரியுமா? கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் 5 விக்கெட்டை சுலபமாக கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதன்பின்னர் பேட்டிங் செய்த வீரர்களின் விக்கெட்டை கைப்பற்ற மிகவும் கடுமையாக இருந்தது.

முதல் 5 விக்கெட்டை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தோல்வி என்ற நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மின்னல் போல பேட்டிங் செய்த ஆன்ட்ரே ரசல் 21 பந்தில் 54 ரன்கள் அடித்தார்.

அதனபின்னர் 11.1 ஓவரில் சாம் கரண் வீசிய பந்தை அகலப்பந்து என்று நினைத்த ஆண்ட்ரே ரசல் ஒதுங்கி போனார். ஆனால் அந்த பந்தில் அவுட் ஆனார் ரசல். அதனால் சிஎஸ்கே அணிக்கு ஒரு பெரிய தலைவலியே போய்விட்டது. அதன்பின்னர் பேட்டிங் செய்த பேட் கம்மின்ஸ் ரன்களை விளாசினார்.

இருந்தாலும் ரசல் ஆட்டம் இழக்காமல் இருந்திருந்தால் நிச்சியமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்ல அதிகம் வாய்ப்பு இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆன்ட்ரே ரசலின் விக்கெட்டை இழக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.