வீடியோ ; ஏன்டா..! இந்த கேட்ச் கூட ஒழுங்கா பிடிக்க தெரியாத..!! ஹர்ஷல் பட்டேல் மற்றும் கோலியை கடுப்பேற்றிய முகமது சிராஜ்….!

16வது போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதுவரை இந்த இரு அணிகளும் 24 போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளது.

அதில் 11 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் 10 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வென்றுள்ளது. நேற்று போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தனர்.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருந்தாலும் 5வதாக பேட்டிங் செய்த சிவம் துபே மற்றும் ராகுல் திவேதிய ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்த நிலையில் 177 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் ஜோஸ் பட்லர் 8 ரன்கள், சாம்சன் 21 ரன்கள், மில்லர் 0 ரன்கள், சிவம் துபே 46 ரன்கள், ரியான் பராக் 25 ரன்கள், ராகுல் திவேதிய 40 ரன்கள் மற்றும் கிறிஸ் மோரிஸ் 10 ரன்களை எடுத்துள்ளனர். பின்பு 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 16.3 ஓவரில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 181 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றினர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பவுலிங் செய்த 11 ஓவரில் ஹர்ஷல் பட்டேல் வீசிய பந்தை எதிர்கொண்ட ரியான் பராக், பவுண்டரி லைன் பக்கத்தில் அடித்தார். அதனை பிடிக்க முயன்ற முகமது சிராஜ் சுலபமாக கைப்பற்ற வேண்டிய பந்தை, கவனக்குறைவால் பவுண்டரி ரன்கள் ரியான் பராக் கைப்பற்றினார்.

சிராஜின் செயலால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் மற்றும் பவுலர் ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவரும் கோவப்பட்டனர். அதன் வீடியோ இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நேற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றியை கைப்பற்றியதால் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.