சிஎஸ்கே அணி ப்ளே – ஆஃப் க்கு வந்தால் இவர்கள் அணியில் விளையாட மாட்டார்கள் ; என்ன செய்ய போகிறார் தோனி ? முழு விவரம் இதோ;

ஐபிஎல் 2021: 14வது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் கோலாகலமாக இந்தியாவில் நடைபெற்றது. இதுவரை 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது பிசிசிஐ. ஏன் ஐபிஎல் 2021 நிறுத்திவைத்தனர்?

30 வது போட்டி நடைபெற இருந்த நேரத்தில் சில வீரர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதியானது. அதனால் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து போட்டிகளை ரத்து செய்து அவரவர் வீட்டுக்கு வழி அனுப்பிவைத்தது பிசிசிஐ.

மீதமுள்ள போட்டிகள் நடைபெறுமா ? இல்லையா?

மீதமுள்ள போட்டிகள் இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடத்த முடிவு செய்தது பிசிசிஐ. செப்டம்பர் 19ஆம் தேதி அன்று மீதமுள்ள போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளது. அதனால் இப்பொழுது அனைத்து வீரர்களும் ஐக்கிய அரபு நாட்டில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை 14 சீசன் ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றிகளை கைப்பற்றிய அணிகளுள் ஒன்றுதான் சென்னை சூப்பர் கிங்ஸ். அதேபோல கடந்த ஐபிஎல் 2020 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

ஆனால் இருந்தாலும் இந்த முறை அதற்கு நேர் எதிர்மாதிரி புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே. ஐபிஎல் ஆரம்பித்த 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுதுவரை சிஎஸ்கே அணியை சிறப்பாக வழிநடத்தி வருகின்ற ஒரே ஆள் நம்ம மகேந்திர சிங் தோனி தான்.

ஒருவேளை சிஎஸ்கே அணி ப்ளே -ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால், சிஎஸ்கே அணியின் வீரர்கள் மொயின் அலி மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்பு இல்லையாம். அதற்கு என்ன காரணம் தெரியுமா??????

ஐபிஎல் 2021 போட்டிகள் நடந்து முடிந்த உடன் ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் அவர் அணிகளுக்கு சென்று விடுவார்கள் என்ற தகவல் வெளியானது. இந்த நிலைமை ஏற்பட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்ன ஆகும் ?

ஏனென்றால் சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர்கள் தான் இருவரும். இவர்கள் இல்லையென்றால் தோனி எப்படி சமாளிப்பர் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.